Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஇந்தியா vs ஆஸ்திரேலியா; இரண்டு விக்கெட்டுகளை பறித்த இந்திய பந்துவீச்சாளர்கள்!

    இந்தியா vs ஆஸ்திரேலியா; இரண்டு விக்கெட்டுகளை பறித்த இந்திய பந்துவீச்சாளர்கள்!

    இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் விளையாடும் பார்டர் – கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான பார்டர் – கவாஸ்கர் டெஸ்ட் தொடரின்  முதல் போட்டி நாக்பூரில் இன்று தொடங்கியது. பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் இப்போட்டியானது தொடங்கியுள்ளது. 

    இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. டாஸ் குறித்து ரோஹித் சர்மா கூறுகையில், “டாஸ் வென்றிருந்தால் நாங்களும் பேட்டிங்கே தேர்வு செய்திருப்போம். அது ஸ்பின்னர்ங்களுக்கு நல்ல உதவியாக இருக்கு. இப்போது என்ன நடக்கிறது என்று பொறுத்திருந்து பார்க்க வேண்டும். கடந்த 4, 5 நாட்களாக தீவிரமாக பயிற்சி மேற்கொண்டுள்ளோம். எல்லா சவால்களையும் கணித்து பயிற்சி மேற்கொண்டோம். இந்தத் தொடரின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளோம். இது நீண்ட தொடர். இதில் வெற்றி பெற வேண்டும்” என்றார்.

    இதைத்தொடர்ந்து, டேவிட் வார்னரும், உஸ்மான் க்வாஜாவும் துவக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கினர். இருவருமே அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை முறையே இந்திய வேகப்பந்துவீச்சாளர்கள் ஷமி மற்றும் சிராஜிடம் பறிகொடுத்தனர். இவர்களுக்குப் பிறகு தற்போது ஆட்டக்களத்தில் மார்னஸ் மற்றும் ஸ்மித் விளையாடிக் கொண்டிருக்கின்றனர். 

    மேலும், இந்திய அணியின் தரப்பில் இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் சூர்யகுமார், பரத் ஆகியோர் டெஸ்ட் போட்டியில் முதன்முறையாக களம் காண்பது குறிப்பிடத்தக்கது.

    கேரளாவில் திருநம்பிக்கு குழந்தை பிறந்தது.. மகிழ்ச்சியில் தம்பதியினர்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....