Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாசென்னையில் தயாரிக்கப்பட்ட மருந்தால் அமெரிக்காவில் பார்வை குறைபாடு? - நிறுவன உரிமம் நிறுத்தம்!

    சென்னையில் தயாரிக்கப்பட்ட மருந்தால் அமெரிக்காவில் பார்வை குறைபாடு? – நிறுவன உரிமம் நிறுத்தம்!

    சர்ச்சைக்குரிய குளோபல் பார்மா கண் மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் உற்பத்தி உரிமத்தினை ஆய்வு நடவடிக்கைகள் முடிவடையும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளதாக மாநில மருந்து தரக் கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது. 

    சென்னையில் இயங்கி வரும் குளோபல் பார்மா நிறுவனத்தால் தயாரிக்கப்படும் கண் மருந்துகளால் அமெரிக்காவில் பார்வை குறைபாடு ஏற்பட்டதாக 55 புகார்கள் எழுந்தன. 

    குளோபல் பார்மா நிறுவனத்தின் மருந்துகள் இந்தியாவில் சந்தைப்படுத்தப்படவில்லை என்றாலும் அமெரிக்காவில் சந்தைப்படுத்தப்பட்ட மருந்துகளை திரும்பப் பெறுவதாக, அந்நிறுவனம் அறிவித்தது. 

    புகார்கள் தொடர்ந்து எழுந்ததை அடுத்து திருப்போரில் இருக்கும் அந்த நிறுவனத்தின் தொழிற்சாலையில், மத்திய, மாநில மருந்து கட்டுப்பாட்டு துறை அதிகாரிகள் சமீபத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மருந்து உற்பத்திக்கான மூலப்பொருள்கள் மற்றும் அதன் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட மருந்துகளின் மாதிரிகள் ஆகியவை சோதனை செய்யப்பட்டன. 

    இந்நிலையில், ஆய்வு முடிவுகள் வெளியாகும் வரை அந்த நிறுவனத்தின் உற்பத்தி உரிமம் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக மாநில மருந்து கட்டுப்பாட்டு வாரியம் அறிவித்துள்ளது.

    வெளியானது, தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள வாத்தி படத்தின் டிரைலர்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....