Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்17 மணி நேரமாக தம்பியுடன் இடிபாடுகளில் சிக்கித் தவித்த சிறுமி ; வைரலான வீடியோ!

    17 மணி நேரமாக தம்பியுடன் இடிபாடுகளில் சிக்கித் தவித்த சிறுமி ; வைரலான வீடியோ!

    சிரியாவில் நிலநடுக்க மீட்பு பணிகளின்போது 17 மணி நேரம் கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்த சிறுமியின் வீடியோ இணையதளத்தில் வைரல் ஆகி வருகிறது. 

    துருக்கியில் நேர்ந்த நிலநடுக்கத்தால் துருக்கி மற்றும் சிரியா நாடுகளில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதுவரையில், 15,000-த்துக்கும் அதிகமானோர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. மேலும், பலி எண்ணிக்கை 20,000-த்தை தாண்டுமென கணிக்கப்பட்டுள்ளது. 

    கடந்த பிப்ரவரி 6-ஆம் தேதி ஏற்பட்ட நிலநடுக்கத்தின் மீட்பு பணியானது இன்றளவும் நடைபெற்று வருகிறது. இந்த மீட்பு பணிகளின் போது நிகழும் பல சம்பவங்கள் வீடியோவாக இணையதளத்தில் வெளிவந்து பலரையும் துயரத்தில் ஆழ்த்தி வருகிறது. 

    இந்நிலையில், சிரியாவில் மீட்புப் பணிகளின் போது இடிபாடுகளுக்கு இடையே இருந்து ஒரு சிறுமியும் அவரது சகோதரரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அந்த சிறுமியும், அவரது தம்பியும் சுமார் 17 மணி நேரமாக இவர்கள் கட்டட இடிபாடுகளில் சிக்கியிருந்தனர். அதன்பின்பு இவர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டனர். 

     தற்போது இது சமந்தமான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலானது. இதைத்தொடர்ந்து, அந்த வீடியோவை உலக சுகாதார நிறுவனத் தலைவர் டெட்ரோஸ் அதோனம் அந்த வீடியோவைப் பகிர்ந்து,”இந்த துணிச்சலான சிறுமிக்கு எல்லையில்லா பாராட்டு” என்று பதிவிட்டுள்ளார்.

    காதலர் தினமா? பசு அணைப்பு தினமா? – அரசின் சுற்றறிக்கையால் குழப்பம்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....