Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாநீருக்கடியில் செல்லும் நாட்டின் முதல் மெட்ரோ திட்டப்பணி எப்போது முடியும்?

    நீருக்கடியில் செல்லும் நாட்டின் முதல் மெட்ரோ திட்டப்பணி எப்போது முடியும்?

    நாட்டிலேயே முதல் முறையாக கொல்கத்தாவின் ஹூக்ளி ஆற்றில் மெட்ரோ ரயிலுக்காக சுரங்கப்பாதை அமைக்கப்படுகிறது. 

    கொல்கத்தாவின் கிழக்கு-மேற்கு மெட்ரோ ரயில் திட்டப் பணிகளில் ஒரு பகுதியாக ஹூக்ளி ஆற்றில் மெட்ரோ ரயிலுக்காக சுரங்கப்பாதை அமைக்கும் பணி நடைபெறுகிறது. 

    இந்தச் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டதும், மெட்ரோ ரயில்கள் வெறும் 45 வினாடிகளில் 520 மீட்டர் நீருக்கு அடியில் கடந்து சென்றுவிடும். இந்த கொல்கத்தா சுரங்கப்பாதையானது ஆற்றுப்படுகையின் கீழ் 13 மீட்டரும், தரைப்பகுதியில் இருந்து 33 மீட்டர் ஆழத்திலும் அமைந்துள்ளது.

    கிழக்கு-மேற்கு மெட்ரோ ரயில் திட்டம், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் நிறைந்து இருக்கும் சால்ட் லேக் செக்டார் வி பகுதியை ஹௌரா மைதானத்தை ஹூக்ளி ஆற்றைக் கடந்து இணைய திட்டமிடப்பட்டுள்ளது. 

    நாட்டின் முதல் சுரங்கப்பாதை மெட்ரோ வழித்தடம் அமைக்கும் பணி கிட்டத்தட்ட நிறைவு பெற்றுவிட்டது என்றும், வருகிற 2023 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 2.5 கிலோ மீட்டர் தொலைவுள்ள எஸ்பிளனேடு-சீல்டா இடையேயான வழித்தடம் அமைக்கும் பணி நிறைவு பெற்றுவிட்டால் ரயில் இயக்கம் தொடங்கிவிடும் என சொல்லப்படுகிறது. 

    சுரங்கப்பாதைக்குள் ஆற்றுநீர் புகாத வண்ணம், நவீன தொழில்நுட்ப வசதிகளை பயன்படுத்தி இந்தச் சுரங்கப்பாதை அமைக்கப்பட்டுள்ளது. 

    தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை; வெளிவந்த அறிவிப்பு…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....