Wednesday, March 20, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புதேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை; வெளிவந்த அறிவிப்பு...

    தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் வேலை; வெளிவந்த அறிவிப்பு…

    தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் உள்ள காலிப்பணியிடங்கள் குறித்த அறிவிப்பு வெளிவந்துள்ளது. 

    இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் காலியாக உள்ள மேலாளர், உதவி மேலாளர் உள்ளிட்ட 18 பணியிடங்களுக்கான புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளிவந்துள்ளது. 

    இவற்றுள் நிர்வாகம் சார்ந்த மேலாளர் பணியிடத்திற்கு 12 நபர்களும், சட்டம் சார்ந்த மேலாளர் பணியிடத்திற்கு 2 நபர்களும், உதவி மேலாளர் பணியிடத்திற்கு 4 நபர்களும் தேவைப்படுவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தெரிவித்துள்ளது. 

    மேலும், மேலாளர் பணியிடங்களுக்கு மாத சம்பளமாக  ரூ.15,600 – ரூ. 39100 வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், உதவி மேலாளர் பணியிடத்திற்கு மாதம் ரூ.9,300-34,800 ஊதியம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த பணியிடத்திற்கு விண்ணப்பிக்க அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனங்கள், பல்கலைக்கழகத்தில் பணி சார்ந்த பிரிவில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 5 ஆண்டுகள் வரை பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 

    இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள்  56 வயதிற்குள் இருக்க வேண்டும். மேலும், மேற்கண்ட பணியிடங்களுக்கு தகுதியானவர்கள் பிரதிநிதித்துவம் முறைப்படி தேர்வு செய்யப்படுவர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

    தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தில் உள்ள மேற்கண்ட காலிப்பணியிடங்களுக்கு https://www.nhai.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். அத்துடன், ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 19-01-2023 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இப்பணியிடம் குறித்து மேலும் அறிய கீழ்காணும் இணையதளத்தை அனுகவும், https://nhai.gov.in/nhai/sites/default/files/vacancy_files/Detailed%20Advertisement_0.pdf.

    ஆன்லைன் சூதாட்டம்; நோட்டீஸ் அனுப்பிய சிபிசிஐடி

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....