Saturday, March 16, 2024
மேலும்
    Homeகல்வி மற்றும் வேலை வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியது...

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியது…

    இந்தியாவில் இளநிலை மருத்துவம் மற்றும் பல் மருத்துவ படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான ஆன்லைன் கலந்தாய்வு தொடங்கியது.

    எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான அகில இந்திய மருத்துவ ஒதுக்கீட்டு இடங்களுக்கான மருத்துவக் கலந்தாய்வு அக்டோபர் 11-ம் தேதி முதல் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

    அதன்படி, இன்று மருத்துவக் கலந்தாய்வு, www.moc.nic.in என்ற இணையதளம் வாயிலாக அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இதையும் படிங்க:ட்ரோனி’ ட்ரோன் கேமராவை அறிமுகம் செய்து வைத்த ‘தோனி’ தல! இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா ?

    அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள், எய்ம்ஸ், ஜிப்மர் உள்ளிட்ட மருத்துவக் கல்லூரிகளுக்கு இன்று தொடங்கிய முதல்கட்ட மருத்துவக் கலந்தாய்வு அக்டோபர் 20-ம் தேதி வரை நடைபெறும். இதைத்தொடர்ந்து, அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கான இரண்டாம் கட்ட மருத்துவக் கலந்தாய்வு நவம்பர் 2-ம் தேதி முதல் 10ஆம் தேதி வரை நடைபெறும். இதற்கிடையே, மாநிலங்களுக்கான 2-ம் கட்ட கலந்தாய்வு நவம்பர் 7-ம் தேதி 18-ம் தேதி வரை நடைபெறும்.

    மேலும், இதனிடையே அக்டோபர் 17-ம் தேதி முதல் 28-ம் தேதிக்குள் மாநிலங்களில் முதல்கட்ட மருத்துவக் கலந்தாய்வை நடத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முதலாமாண்டு மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கு நாடு முழுவதும் நவம்பர் 15-ம் தேதி கல்லூரிகள் திறக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....