Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு'ட்ரோனி' ட்ரோன் கேமராவை அறிமுகம் செய்து வைத்த 'தோனி' தல! இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா...

    ‘ட்ரோனி’ ட்ரோன் கேமராவை அறிமுகம் செய்து வைத்த ‘தோனி’ தல! இதுல என்ன ஸ்பெஷல் தெரியுமா ?

    புதுவகை ட்ரோனை மகேந்திர சிங் தோனி நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் மூலம் அறிமுகம் செய்தார்.

    சென்னையை சேர்ந்த ஏரோஸ்பேஸ் நிறுவனம்தான், கருடா ஏரோஸ்பேஸ். இந்நிறுவனம் சமீப காலமாக பல்வேறு வகையில் உதவும் ட்ரோன்களை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. 

    கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனம், நுகர்வோர் பயன்பாடு மற்றும் கேமரா பொருத்தப்பட்ட ட்ரோன் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ட்ரோனுக்கு ‘ட்ரோனி’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. 

    இந்த ‘ட்ரோனி’ விவசாய பூச்சிக்கொல்லி தெளித்தல், சோலார் பேனல் சுத்தம் செய்தல், தொழிற்சாலை குழாய் ஆய்வுகள், மேப்பிங் சர்வே, பொது அறிவிப்புகள், டெலிவரி சேவைகள் போன்றவற்றுக்கு உதவும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, ‘ட்ரோனி’ பேட்டரியில் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆளில்லா ட்ரோன் 30 ஏக்கர் நிலப்பரப்பில் உள்ள விவசாய நிலங்களில் பூச்சிக் கொல்லி மருந்துகளை தெளிக்கும் திறன் கொண்டது. 

    இதையும் படிங்க:கிரிக்கெட்டில் சாதித்த தோனி…இதிலும் சாதிப்பாரா?

    மேலும், ‘ட்ரோனி’ ட்ரோனை இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி நேற்று சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் மூலம் அறிமுகம் செய்தார். அப்போது, அவர் இது விவசாயிகளுக்கு பெரிதும் உதவும் என்றும், கொரோனா காலத்தில் தான் செய்த விவசாயம் பற்றியும் நினைவு கூர்ந்தார். 

    இந்த ‘ட்ரோனி’ ட்ரோன் ஆனது 2022-ம் ஆண்டின் இறுதிக்குள் சந்தையில் கிடைக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது. இருப்பினும், ட்ரோனின் விலை குறித்த விபரங்கள் எதுவும் வெளியாகவில்லை.

    மகேந்திர சிங் தோனி கருடா ஏரோஸ்பேஸ் நிறுவனத்தின் அம்பாசிடர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....