Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்தெலுங்கானாவில் மக்களை சந்திக்க தைரியம் இருக்கா ? தமிழிசைக்கு சவால் விடுத்த நாராயணசாமி

    தெலுங்கானாவில் மக்களை சந்திக்க தைரியம் இருக்கா ? தமிழிசைக்கு சவால் விடுத்த நாராயணசாமி

    திமுகவில் வாரிசு அரசியல் என்று குறிப்பிடும் தமிழிசை, முதலில் அவர் முதுகை பார்க்கவேண்டும் என முன்னாள் முதல்வர் பேசியுள்ளார். 

    சூப்பர் சிஎம் ஆக இருப்பதை படிப்படியாக துணைநிலை ஆளுநர் தமிழிசை நிரூபணம் செய்கிறார். தற்போது புதுச்சேரி ராஜ்நிவாஸில் மக்கள் குறைகேட்பைத் துவக்கியுள்ளார். இது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று புதுச்சேரியின் முன்னாள் முதல்வர் நாரயணசாமி தெரிவித்துள்ளார். 

    புதுச்சேரியில் நேற்று செய்தியாளர்களை முன்னாள் முதல்வர் நாராயணசாமி சந்தித்தார். 

    அப்போது அவர் பேசியதாவது :

    மக்களால் தேர்வான அரசை தமிழிசை அவமதிக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. கிரண்பேடி காலத்தில் உருவான நிலை இன்னும் தொடர்கிறது. பாஜக கூட்டணி அரசில் படிப்படியாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது. மேலும், என்ஆர் காங்கிரஸை டம்மியாக்குகிறது. 

    இதையும் படிங்க: முத்தத்தால் ஆரம்பித்த சிம்புவின் பாடல்…மிரட்டிய ஷ்ரேயா கோஷல்

    இணக்கமாக இருப்பது போல் செயல்பட்ட துணைநிலை ஆளுநர் தமிழிசை, முதல்வர் ரங்கசாமியின் முதுகில் குத்துகிறார். பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர் மூலம் ஆட்சி செய்வதை வழக்கமாக்கியுள்ளனர். புதுச்சேரியில் அரசுடன் இணைந்து செயல்படுவதாக ஆளுநர் தமிழிசை நாடகமாடி இரட்டை ஆட்சி நடத்துகிறார். முதல்வர் ரங்கசாமியோ தனக்கு முதல்வர் நாற்காலி மட்டும் போதும் என செயல்படுகிறார்.

    புதுச்சேரி ராஜ்நிவாஸில் மக்கள் குறை கேட்கும் நிகழ்வை தொடங்கியவுடனே கூட்டணியிலிருந்து முதல்வர் ரங்கசாமி வெளியே வர வேண்டாமா? ராஜ்நிவாஸில் மக்களை நேரடியாக சந்திப்பதை புதுச்சேரி பாஜக ஏற்கிறதா என்பதை தெரிவிக்க வேண்டும். புதுச்சேரியைப் போன்று தெலங்கானாவில் ராஜ்நிவாஸில் மக்களை ஆளுநர் தமிழிசை சந்திக்கும் திராணி உள்ளதா?

    திமுகவில் வாரிசு அரசியல் என்று குறிப்பிடும் தமிழிசை, முதலில் அவர் முதுகை பார்க்கவேண்டும் என்று கூறினார். 

    இவ்வாறு அவர் பேசினார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....