Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுதமிழகம் முழுவதும் கொட்டி தீர்த்த மழை ! இன்று 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

    தமிழகம் முழுவதும் கொட்டி தீர்த்த மழை ! இன்று 14 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை

    தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. 

    வட  தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர்,  திண்டுக்கல், தேனி,  மதுரை, கரூர்,  ஈரோடு,  நாமக்கல், சேலம், திருச்சிராப்பள்ளி, தர்மபுரி, கிருஷ்ணகிரி, மற்றும் திருப்பத்தூர் ஆகிய 14 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

    இந்நிலையில், விருதுநகர் மாவாட்டம் ராஜபாளையம் பகுதியில் நேற்று 2 மணி நேரம் தொடர்ந்து மழை பெய்தது. 

    அதேபோல், கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் பகுதியிலும் நேற்று, மழை கொட்டித் தீர்த்தது. கனமழை காரணமாக சாலைகள் சேரும் சகதியுமாக காட்சியளித்தன. 

    இதையும் படிங்க: சிறந்த வீராங்கனையாக இந்திய வீராங்கனை தேர்வு…ஐசிசி வெளியிட்ட பட்டியல்!

    மேலும், திருப்பத்தூர் மாவட்டத்தின் பல பகுதியிலும் நேற்று இரவு கனமழை பெய்தது. குறிப்பாக நாட்றம்பள்ளி சுற்று வட்டார பகுதியில் கனமழை கொட்டித் தீர்த்தது. 

    கடந்த 2 நாட்களாகவே நீலகிரியில் பரவலாக மழை பெய்து வருகிறது. 

    ராமநாதபுரம், பரமக்குடி பகுதியிலும் நேற்று பரவலாக மழை பெய்தது. குறிப்பாக பரமக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை ஒரு மணி நேரம் கனமழை பெய்தது. 

    மேலும், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கனமழை விட்டு விட்டு பெய்து வருகிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....