Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசமூக வலைதளம்தளரத்தப்பட்ட கட்டுப்பாடுகள்; ட்ரெண்ட் ஆன வலிமை, குதூகலத்தில் ரசிகர்கள்!

    தளரத்தப்பட்ட கட்டுப்பாடுகள்; ட்ரெண்ட் ஆன வலிமை, குதூகலத்தில் ரசிகர்கள்!

    கொரோனா கட்டுப்பாடுகள் தொடர்ந்து தளர்த்தப்பட்டு வரும் நிலையில் இன்று தமிழகத்தில் கூடுதல் தளர்வுகளுடன் கொரோனா பொது முடக்கம் நீட்டிக்கப்படும் என தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

    அதன்படி, தளரத்தப்பட்ட கட்டுப்பாடுகள் குறித்து அறிவிக்கப்பட்டது. அவற்றில் நர்சரி பள்ளிகளுக்கு அனுமதி, பொருட்காட்சிகளுக்கு அனுமதி போன்றவை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், வருகிற புதன் கிழமை அதாவது பிப்ரவரி பதினாறாம் தேதி முதல் திரையரங்குகளில் நூறு சதவீதம் (100%) பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக தற்போது வரை ஐம்பது சதவீத பார்வையாளர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர்.

    valimai ajith

    நூறு சதவீத பார்வையாளர்களை அனுமதித்திக்குமாறு ஏற்கனவே முறையிட்டு வந்த நிலையில், இம்மாதம் 24 ஆம் தேதி, அஜித்குமார் நடிப்பில் பல நாளாய் வெளியாகாமல் தள்ளிப்போன வலிமை திரைப்படம் பெரிய எதிர்பார்ப்புடன் திரைக்கு வருவதால் விரைவில் நூறு சதவீத பார்வையாளர்களை திரையரங்குகளில் அனுமதிக்குமாறு சினிமா ரசிகர்கள், அஜித் ரசிகர்கள் மற்றும் திரைத்துறையினர் தொடர்ந்து முறையிட்டு வந்தனர்.

    இப்படியான சூழலில், தமிழகத்தின் ‘நூறு சதவீதம் பார்வையாளர்களுக்கு அனுமதி அளிக்கப்படும்’ என்ற உத்தரவை சமூக வலைத்தளங்களில் அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து அதனூடே வலிமை திரைப்படத்தின் ஹேஷ்டெகையும் இணைத்து ட்ரெண்ட் செய்து வருகின்றனர். இதனால் தற்சமயம் சமூக வலைத்தளம் வலிமை என்ற ஹேஷ்டெகுகளுடன் நிரம்பி வழிகிறது.

    Movie-theatres

    திரையரங்குகளில் வலிமை திரைப்படத்தின் காட்சிகளின் போது, திரையரங்குகள் திருவிழாக் கோலம் புகும் என்பது உறுதி. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....