Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குதிரை விமர்சனம்/சிறப்பு பார்வைகாந்தி மகானாக விக்ரம் நடித்த மகான் திரைப்படத்தின் பார்வை!

    காந்தி மகானாக விக்ரம் நடித்த மகான் திரைப்படத்தின் பார்வை!

    சீயான் விக்ரம் நடிப்பில் அமேசான் பிரைமில் வெளியாகி இருக்க கூடிய திரைப்படம்தான், மகான். கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் வெளிவந்திருக்க கூடிய இத்திரைப்படத்தில் பாபி சிம்ஹா, துருவ் விக்ரம், சிம்ரன் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    mahaanகாந்தியக் கொள்கைகளை தீவிரமாக பின்பற்றும் குடுமபத்தில் பிறக்கும் விக்ரம், காந்தியக் கொள்கைகளின் படியே தனது நாற்பது ஆண்டுகால வாழ்வை கழித்து வருகிறார். அதன் பின்பு ஒரு நாள் பிடித்தபடி வாழ முடிவெடுத்து அதன்படி அன்று ஒரு நாள் மது, சூது என நாளை கடக்க, மது அருந்தியது அவரின் மனைவிக்கு தெரிந்து விடுகிறது. இதனால் வெறுப்படைந்த மனைவி சிம்ரன் மகனுடன் அயலூர் சென்று விடுகிறார்.

    4mahaan

    தற்போது, தனி ஆளாக இருக்கும் காந்தி மகான் எனும் விக்ரம், நண்பன் பாபி சிம்ஹாவின் மது கலாச்சாரத்திற்குள் நுழைய காந்தி மகான் கதாப்பாத்திரம் எழுச்சி பெறுகிறது. அதன் பின்பு காந்தி மகான் பெரிய மது சாம்ராஜ்ஜியத்தை உருவாக்க அதற்கு மற்றோரு அரசியல்வாதி நண்பன் துணை புரிகிறான்.

    மது சாம்ராஜ்ஜியத்தை ஒழிக்க, காந்தி மகானை பழிவாங்க, காந்தி மகானின் புதல்வன் தாதா என்கிற துருவ் விக்ரம் வருகிறார். இதன் பின் என்னவெல்லாம் நடக்கிறது என்பதே கதை.

    விக்ரம் பல நாட்களுக்கு பிறகு ரசிகர்கள் கொண்டாடும்படியான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.  நடிப்பு, மாஸ் என அனைத்து விதமாகவும் ஹை ஹைஸ்கொர் செய்கிறார், விக்ரம்! உடல் மொழியால் விக்ரம் செய்யும் செயல்கள் அதகளம். ஒவ்வொரு பாடலிலும் விக்ரமின் உத்வேகம் வியப்புக்குரிய ஒன்றாகவே இருக்கிறது. மனைவி மகன் பிரிவில் வாடும்போதும் சரி, மதுவில் மிதக்கும்போதும் சரி, பண மழையில் இருக்கும்போது சரி, இன்னல்களுக்கு இடையில் சிக்கி தவிக்கும்போதும் சரி, காந்தி மகானாக விக்ரம் செய்பவைகள் ரசிக்க வைக்கிறது.

    காந்தி மகான் கதாபாத்திரத்தின் வடிவமைப்பில் புதுமைகள் இருப்பதாகவே தென்படுகிறது. சண்டை செய்ய தெரியவில்லை என்பது, குழம்பி பொய் நிற்பது, பல இடங்களில் மற்ற கதாபாத்திரங்கள் முன்னே நிற்க, காந்தி மகான் பின்னிருப்பது போன்றவை வசீகரமாகவே இருக்கிறது.

    mahaan

    கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் நடிக்கும் பாபி சிம்ஹாவும், மற்றவர்களின் இயக்கத்தில் நடிக்கும் பாபி சிம்ஹாவும் இரு வேறு நபர்கள் என்ற சொல்லாடலுக்கு ஏற்பவே மகான் திரைப்படத்திலும் பாபி சிம்ஹாவின் நடிப்பு இருந்தது. கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் பாபி சிம்ஹா நடிகனாக தன்னை நிலை நிறுத்திக்கொள்கிறார்.

    mahaan

    துருவ் விக்ரம் திரைப்படத்தின் இரண்டாம் பாதியில் இருந்துதான் நெடுக வர தொடங்குகிறார். விறைப்பு தோற்றத்துடனே படத்தில் அவர் பயணிப்பது சமயங்களில் அயர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது. குறிப்பாக ஓவர் ஆக்டிங் செய்யும் இடங்களில்! துருவ் விக்ரம், விக்ரமை சந்திக்கும்போது நேரும் பட்டாசு போன்ற காட்சிகள் அவ்வபோது வெடித்து எழுவது திரைப்படத்திற்கு வலு சேர்க்கிறது. பாபி சிம்ஹாவின் மகனாக நடித்திருக்கும் சனந்த் தான் வரும் இடங்களில் எல்லாம் சிறு வசனம் மூலமோ, உடல் மொழி மூலமோ நம்மை கவனிக்க வைத்து விடுகிறார்.

    SANTHOSH NARAYANAN

    சந்தோஷ் நாராயணன் மகான் திரைப்படத்திற்கு மிக பெரிய பலம் என்று சொன்னால் அது மிகையாகாது. பாடல்கள் மூலம் படத்தின் போக்கை , அந்த அந்த சூழ்நிலைகளை, கதாபாத்திரங்களின் உணர்வுகளை மகான் திரைப்படம் சொல்லி சென்ற விதம் பாராட்டுக்குரியது.

    திரைக்கதையை பொறுத்த வரை தொடர் சோர்வு எங்குமே ஏற்படவில்லை. அவ்வபோது நேரும் சிறு சோர்வுகள் அடுத்த அடுத்த காட்சிகளால் மறக்கடிக்கப்பட்டு விடுகின்றன. 

    Karthik Subbaraj

    அளவுக்கு அதிகமானால் எதுவுமே தவறு என்பதை தனக்கே  உரிய பாணியில் கார்த்திக் சுப்பாராஜ் இப்படத்தில் கூறி உள்ளார். ட்விஸ்டுகள் இல்லா திரைப்படத்தை கார்த்திக் சுப்பாராஜ் எடுக்கவே மாட்டார் என்ற கருத்தை மீண்டும் நிரூபிக்கும் வகையில் உள்ளது மகான்! எமோஷன் காட்சிகள் ஒட்டாமல் போனது திரைப்படத்தின் பெரும் குறையாக தெரிகிறது. 

     

    மகான் திரைப்படம் அமேசான் பிரைமில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கிறது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....