Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஒற்றுமை நடைப்பயணத்தை முன்கூட்டியே முடிக்கப்போகிறாரா ராகுல்! என்னவாக இருக்கும்?

    ஒற்றுமை நடைப்பயணத்தை முன்கூட்டியே முடிக்கப்போகிறாரா ராகுல்! என்னவாக இருக்கும்?

    இந்திய ஒற்றுமையை வலியுறுத்தி ராகுல் காந்தி மேற்கொண்ட பாரத்ஜோடா யாத்திரையை குறித்த தேதிக்கு முன்பே முடிக்க உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

    ராகுல் காந்தி தலைமையில் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி கன்னியாகுமரியில் இருந்து ஆரம்பித்த இந்த ஒற்றுமை நடைபயணம் கேரளா, கர்நாடகா என பயணித்து தற்போது மத்திய பிரதேசத்தில் தொடர்ந்து வருகிறது. கடைசியாக ஸ்ரீ நகரில் தேசிய கொடியை ஏற்றி பிப்ரவரி 20-ஆம் தேதியோடு முடிக்கப்படுவதாக இருந்த இந்த ஒற்றுமை யாத்திரை அதற்கு முன்பாகவே ஜனவரி 26-ஆம் தேதி அதாவது இத்தியாவின் 74-வது குடியரசு தினத்தன்று முடிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

    அதற்கு மிக முக்கிய காரணம் 2024-ஆம் ஆண்டு நடைபெற உள்ள மக்களவை தேர்தல்தானாம். மக்களவை தேர்தலை கருத்தில் கொண்டே ராகுல் காந்தி இந்த முடிவை எடுத்திருப்பதாக சொல்லப்படுகிறது.3,500 கிலோமீட்டர் தொலைவிலான இந்த நடைபயணத்தை குடியரசு தினமான ஜனவரி 26-ஆம் தேதி அன்று காஷ்மீரில் கொடியேற்றத்துடன் ராகுல் காந்தி முடித்துவைப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதன் பிறகு காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் தொடர்பான கூட்டங்கள் நடத்தப்படும் என்றும், ராகுல் காந்தி நடைப்பயணத்தில் இருந்தால் தேர்தல் தொடர்பான கூட்டங்களை நடத்துவதில் சிக்கல் ஏற்படலாம் என்பதாலையே இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

    இருப்பினும் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் எதுவும் காங்கிரஸ் கட்சி சார்பிலோ அல்லது ராகுல் காந்தி தரப்பில் இருந்தோ வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா-அமெரிக்கா கூட்டு ராணுவ பயிற்சி; சீனாவின் அதிருப்திக்கு பதிலடி கொடுத்த இந்தியா

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....