Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்விஜய்யின் வாரிசு பட டிரெய்லர்; கசிந்த அப்டேட்

    விஜய்யின் வாரிசு பட டிரெய்லர்; கசிந்த அப்டேட்

    வாரிசு திரைப்படத்தின் டிரெய்லர் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 1-ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. 

    நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான், வாரிசு. ராஷ்மிகா, சரத்குமார், பிரகாஷ் ராஜ், குஷ்பு, ஷ்யாம் உட்பட பெரும் நட்சத்திர பட்டாளங்களே நடித்திருக்கும் இத்திரைப்படத்தை, பிரபல இயக்குநர் வம்சி இயக்குகிறார். தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜூ தயாரிக்கிறார். 

    வாரிசு திரைப்படம் வருகிற பொங்கலன்று வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, திரைப்பட பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. தமன் இசையில் உருவாகிவரும், வாரிசு திரைப்படத்திலிருந்து சமீபத்தில் ‘ரஞ்சிதமே’ பாடல் வெளிவந்து யூடியூப் தளத்திலும், ரீல்ஸ்களிலும் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் உள்ளது. 

    இந்நிலையில், வாரிசு திரைப்படத்தின் டிரெய்லர் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, ஜனவரி 12-ஆம் தேதி வெளியாகவுள்ள வாரிசு திரைப்படத்தின் டிரெய்லர் புத்தாண்டு (ஜனவரி-1) அன்று வெளியாகும் என தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    முன்னதாக, வாரிசு திரைப்படத்தின் இரண்டாம் பாடல் வருகிற டிசம்பர் 4-ஆம் தேதி வெளியாக உள்ளதாகவும், பிரபல நடிகர் சிம்பு, அப்பாடலை பாடியுள்ளதாகவும் தகவல் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

    வர்ணனையின் போது உடல்நலக்குறைவு; மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரிக்கி பாண்டிங்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....