Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாஅழைக்காத திருமணத்திற்கு சென்று உணவு சாப்பிட்ட எம்பிஏ மாணவருக்கு நேர்ந்த சோகம் 

    அழைக்காத திருமணத்திற்கு சென்று உணவு சாப்பிட்ட எம்பிஏ மாணவருக்கு நேர்ந்த சோகம் 

    திருமண நிகழ்ச்சியில் வயிறார உணவளித்து மணமக்களை வாழ்த்துவது நம்ம ஊர் வழக்கம். அதே சமயம் உணவுக்காக பலர் செல்வதும் உண்டு. எப்போதாவது ஒருநாள் நல்ல சாப்பாடு சாப்பிட மாட்டோமா என ஏங்குபவர்களும் உண்டு. அந்த வகையில் ஒரு எம்பிஏ படிக்கும் மாணவர் ஒருவர் தன்னை அழைக்காத திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று உணவு சாப்பிட்டுள்ளார். 

    மத்திய பிரதேச மாநிலம் போபாலில் எம்பிஏ படிக்கும் மாணவர் ஒருவர் தன்னை அழைக்காத திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உணவு சாப்பிட்டுள்ளார். 

    இதனை நோட்டமிட்ட உறவினர்கள், அவரை கண்டுபிடித்து அம்மாணவர் சாப்பிட்டதற்காக தண்டனையை வழங்கியுள்ளனர். 

    உணவு சாப்பிட்டதால், அங்குள்ள உணவு சமைத்த பாத்திரங்களை கழுவ வைத்துள்ளனர். எம்பி ஏ படித்தவர் என்பது உறவினர்களுக்கு தெரிந்ததும், உனக்கு உனது பெற்றோர் பணம் அனுப்ப மாட்டார்களா? என கேள்வியும் எழுப்பியுள்ளனர். இதனை அங்குள்ள ஒருவர் காணொளியாக பதிவு செய்துள்ளார்.

    இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. அதுமட்டுமின்றி, உணவு சாப்பிட்டதற்காகவா இந்த தண்டனை என நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

    மெட்ரோ ரயிலில் பயணம் செய்யபவரா நீங்கள்? உங்களுக்கான’ குட் நியூஸ்’ தான் இது!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....