Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுமெட்ரோ ரயிலில் பயணம் செய்யபவரா நீங்கள்? உங்களுக்கான' குட் நியூஸ்' தான் இது!

    மெட்ரோ ரயிலில் பயணம் செய்யபவரா நீங்கள்? உங்களுக்கான’ குட் நியூஸ்’ தான் இது!

    மெட்ரோ ரயிலில் பயணிகள் பயணம் செய்ய ஏதுவாக, வாட்ஸ் ஆப் மூலம் மெட்ரோ ரயில் பயணசீட்டு எடுக்கும் வசதியை விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாக மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. 

    மெட்ரோ ரயிலில் பல ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பயணம் செய்து வருகின்றனர். மற்ற போக்குவரத்தை காட்டிலும் மெட்ரோ ரயிலில் குறைந்த அளவிலான நேரத்தில் பயணிக்க முடிகிறது என்பதால் பலரும் இந்த மெட்ரோ ரயில் போக்குவரத்தை பயன்படுத்துகின்றனர். 

    இந்நிலையில் பயணிகள் எங்கு இருந்தாலும், மெட்ரோ ரயில் பயண சீட்டை பெரும் வகையில் புதிதாக வாட்ஸ் ஆப் மூலம், பயணசீட்டை பெறும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக மெட்ரோ ரயில் நிறுவனம் அறிவித்துள்ளது. 

    இந்த புதிய திட்டத்தின் மூலம், மெட்ரோ ரயில் பயணிகள், தாங்கள் இருக்கும் இடத்திலிருந்தே, வாட்ஸ் ஆப் மூலமாக மெட்ரோ ரயில் நிறுவனத்தின் வாட்ஸ் ஆப் எண்ணிற்கு ஹாய் என்று அனுப்பியதும், சாட் பாட் என்ற தகவல் கிடைக்கும். 

    இதன்பிறகு, பயணிகள் தங்களுடைய பெயர், புறப்படும் மெட்ரோ நிலையம், சென்றடையும் மெட்ரோ ரயில் நிலையம் உள்ளிட்டவற்றை கேட்கும். அதை பூர்த்தி செய்து அனுப்பிய பின், அதற்கான கட்டணத்தை வாட்ஸ் ஆப் மூலமாகவோ அல்லது பிற சேவைகள் மூலமாகவோ செய்திடலாம். பிறகு, மெட்ரோ ரயிலில் பயணம் செய்வதற்கான பயணசீட்டு வாட்ஸ் ஆப் எண்ணிற்கு அனுப்பப்படும். 

    இதையடுத்து, மெட்ரோ ரயில் நிலைய நுழைவு வாயிலில் இருக்கும் கியூ ஆர் கோடு மூலம் காண்பித்து ஸ்கேன் செய்த பிறகு பயணம் செய்யலாம். 

    இந்த பயணசீட்டு பெறும் திட்டம் விரைவில் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

    தற்போது, மெட்ரோ ரயிலில் பயணிக்க நேரடி பயணசீட்டு, பயண அட்டை, கியூஆர் கோடு மூலம் பணம் செலுத்தி பயணிக்கும் முறைகள் நடைமுறையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

    ரூ.1.50 கோடியில் முன்னோடி எழுத்தாளர் கி.ரா.வுக்கு சிலை, நினைவரங்கம்: திறந்து வைத்தார் முதலமைச்சர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....