Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுவிஜய் ஹசாரே கோப்பை: வீணான ருதுராஜ் போராட்டம்...கோப்பையை வென்ற சௌராஷ்டிரா

    விஜய் ஹசாரே கோப்பை: வீணான ருதுராஜ் போராட்டம்…கோப்பையை வென்ற சௌராஷ்டிரா

    விஜய் ஹசாரே கோப்பை இறுதிச்சுற்றில் 5 விக்கெட் வித்தியாசத்தில் சௌராஷ்டிரா அணி வெற்றிப்பெற்றுள்ளது. 

    இந்தியாவில் கடந்த நவம்பர் 12-ஆம் தேதி தொடங்கிய விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டி பல்வேறு இடங்களில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், இன்று அகமதாபாத்தில் நடைபெற்று வரும் இறுதிப்போட்டியில் மஹாராஷ்டிரா மற்றும் சௌராஷ்டிரா அணிகள் விளையாடி வருகிறது.

    விஜய் ஹசாரே 50 ஓவர் கோப்பையின் இறுதிப்போட்டிக்கு முதன்முதலாக, மஹாராஷ்டிரா அணி தகுதிப்பெற்றுள்ளது. அதேசமயம், சௌராஷ்டிரா முன்னமே ஒரு முறை கோப்பையை கைப்பற்றி, இரண்டாவது முறையாக கோப்பையை கைப்பற்ற இன்றைய போட்டியை ஆரம்பித்தது. 

    இந்த போட்டியில், முதலில் டாஸ் வென்ற சௌராஷ்டிர அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, மஹாராஷ்டிரா அணி பேட்டிங்கில் களமிறங்கியது. ருத்ராஜ் கெய்க்வாட், பவன் ஷா  ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். 

    இதில் பவன் ஷா 4 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். இவரைத்தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் பெரியளவில் ரன்களை சோபிக்காத நிலையில், மறுபுறம் விளையாடிய ருத்ராஜ் கெய்க்வாட் 131 பந்துகளில் 108 ரன்கள் அடித்து அணியின் ஸ்கோருக்கு பக்க பலமாக இருந்தார். 

    மொத்தத்தில், மஹாராஷ்டிர அணி 9 விக்கெட் இழப்பிற்கு 248 ரன்கள் எடுத்தது. 249 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் சௌராஷ்டிரா அணி களமிறங்கியது. 

    அந்த அணி சார்பில் தொடக்க ஆட்டக்காரர்களாக  ஹார்விக் மற்றும் ஷெல்டன் களமிறங்கினர். இருவரும் சிறப்பான தொடக்கம் தந்தனர். ஹார்விக் 50 ரன்கள் அடித்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன்பின்பு களமிறங்கிய வீரர்கள் பெரிதாக சோபிக்கவில்லை என்றாலும், ஒரு புறம் நிலைத்து சிறப்பாக ஆடிய ஷெல்டன், 133 ரன்கள் அடித்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். 

    சௌராஷ்டிரா அணி 46.3 ஓவரில் 5 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்து விஜய் ஹசாரே கோப்பையை இரண்டாவது முறையாக கைப்பற்றியுள்ளது.

    344 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா… முடிந்த மூன்றாவது நாள் ஆட்டம்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....