Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டு344 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா... முடிந்த மூன்றாவது நாள் ஆட்டம்...

    344 ரன்கள் முன்னிலையில் ஆஸ்திரேலியா… முடிந்த மூன்றாவது நாள் ஆட்டம்…

    மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூன்றாவது நாளின் முடிவில் ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 29 ரன்களை எடுத்துள்ளது.

    மேற்கிந்திய தீவுகள் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தச் சுற்றுப்பயணத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இரண்டு இருபது ஓவர் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் மேற்கிந்திய தீவுகள் அணி பங்கேற்க உள்ளது. 

    இதில் மேற்கிந்திய தீவுகள் அணி இரு இருபது ஓவர் போட்டிகளிலும் தோல்வியைத் தழுவியது. இதன்மூலம், 2-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலிய அணி இருபது ஓவர் தொடரைக் கைப்பற்றியது.

    இதையடுத்து, கடந்த 30-ஆம் தேதி முதலாவது டெஸ்ட் போட்டியது. இந்த போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்தது. முதல் இன்னங்ஸில் அந்த அணி 4 விக்கெட் இழப்பிற்கு 598 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது. இதைத்தொடர்ந்து களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி முதல் இன்னிங்ஸில் 283 ரன்கள் எடுத்து அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 

    மூன்றாவது ஆட்டமான இன்று ஆஸ்திரேலிய அணி தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடியது. இந்நிலையில், தற்போது ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட் இழப்பிற்கு 21 ரன்களை எடுத்துள்ளது.  இதன்மூலம், ஆஸ்திரேலிய அணி மேற்கிந்தீய தீவுகளைவிட 344 ரன்கள் முன்னிலை வகிக்கிறது. 

    முன்னதாக, இந்த போட்டியின் போது வர்ணனையாளரும் முன்னாள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரருமான ரிக்கி பாண்டிங் உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனை சென்றது குறிப்பிடத்தக்கது. 

    விஜய் ஹசாரே கோப்பை: இறுதிப்போட்டியில் தனி ஆளாய் போராடிய ருதுராஜ் கெய்க்வாட்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....