Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டுஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார், பிராவோ... சோகத்திலும் ஒரு மகிழ்ச்சி!

    ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார், பிராவோ… சோகத்திலும் ஒரு மகிழ்ச்சி!

    ஐபிஎல் போட்டிகளிலிருந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர் பிராவோ ஓய்வு பெற்றதாக அறிவித்துள்ளார்.

    இந்தியாவில் நடைபெற்று வரும் இந்தியன் பிரிமீயர் லீக் எனப்படும் ஐபிஎல் போட்டிகளில் முக்கிய வீரராக பார்க்கப்படுபவர், டுவெயின் பிராவோ. சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி பெரும் பெயரைப் பெற்றார் இவர். 

    ஐபிஎல் தொடரின் வரலாற்றில் 2011-ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இணைந்த பிராவோ, சென்னை அணிக்காக 144 போட்டிகளில் விளையாடி 168 விக்கெட்களை கைப்பற்றியுள்ளார். மேலும், பேட்டிங்கில் 1,556 ரன்களை குவித்துள்ளார். 

    ஐபிஎல் வரலாற்றிலேயே அதிக விக்கெட்கள் (183) எடுத்த வீரர் என்ற பெருமையை உடைய பிராவோ தற்போது ஐபிஎல் போட்டிகளிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இம்மாதம், ஐபிஎல் தொடருக்காக மினி ஏலம் நடைபெறவுள்ள நிலையில், பிராவோவின் இந்த முடிவு அதிர்ச்சியளிப்பதாக உள்ளதென ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர். 

    இருப்பினும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளராக பிராவோ தற்போது நியமிக்கப்பட்டுள்ளார். இதனால் சிஎஸ்கே அணியின் பந்துவீச்சுப் பயிற்சியாளர் என்கிற புதிய பொறுப்பை பிராவோவுக்கு அளித்துள்ளது சிஎஸ்கே நிர்வாகம். 

    சிஎஸ்கே அணிக்காக 144 ஆட்டங்களில் விளையாடியுள்ள பிராவோ, 168 விக்கெட்டுகளும் 1556 ரன்களும் எடுத்துள்ளார். சிஎஸ்கே அணி நான்கு முறை ஐபிஎல் கோப்பைகளை வென்றதில் 2011, 2018, 2021 ஆகிய ஆண்டுகளில் பிராவோவின் பங்களிப்பு இருந்துள்ளது. 

    முன்னதாக, மும்பை அணி வீரர் பொல்லார்டு ஐபிஎல் தொடரிலிருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. 

    விஜய் ஹசாரே கோப்பை: இறுதிப்போட்டியில் தனி ஆளாய் போராடிய ருதுராஜ் கெய்க்வாட்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....