Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாவருகிறது.. இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்; இனி மாசில்லா வேக பயணத்திற்கு தயாராகுங்கள்!

    வருகிறது.. இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்; இனி மாசில்லா வேக பயணத்திற்கு தயாராகுங்கள்!

    ஹைட்ரஜனில் இயங்கும் ரயில் அடுத்த ஆண்டு முதல் இந்தியாவில் செயல்படும்என மீதமுள்ள பேட்டரிகளை இயற்கையாகவே வெளியில் கொண்டு வர ரயில்வே துறை தெரிவித்துள்ளது. 

    புவனேஷ்வரில் பிரதமர் மோடி தொடர்பு இருபது ஆண்டுகளாக அரசாங்கத்தன்மை பொறுப்பில் இருப்பதை கொண்டாடும் வகையில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. 

    இதில் கலந்துகொண்ட ரயில்வே மற்றும் மின்னணு தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சகர் அஷ்வினி வைஷ்ணவ் செய்தியாளர்களிடம் பேசியதாவது:

    பிரதமர் மோடி அவர்கள் உலகம் தரம் வாய்ந்த ரயில்களை உருவாக்குமாறு என்ஜினியர்களை கேட்டுக்கொண்டார். முதலில் அதுமாதிரியான ரயில்களை வளர்ந்த நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யலாம் என்று இன்ஜினியர்கள் நினைத்தார்கள்.

    இதையும் படிங்க: சும்மா சர்ன்னு ரோடு இல்ல… இனி வானத்துல பறக்கலாம்..! வந்துருச்சு பறக்கும் பைக் 

    ஆனால், அவற்றை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யுமாறு பிரதமர் உத்தரவிட்டார். தற்போது ஹைட்ரஜனில் இயங்கும் முதலாவது ரயில் முற்றிலும் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு, தயாரிக்கப்பட்டு வருகிறது. அடுத்த ஆண்டு சுதந்திர தினத்தில் இருந்து அந்த ரயில் இந்தியாவில் ஓடத் தொடங்கும் என்று கூறப்பட்டிருக்கிறது. 

    சென்னை ரயில் பெட்டி தொழிற்சாலை தயாரிக்கப்பட்ட ஒரு ரயில் உலகிலேயே சிறந்த ஐந்து ரயில்களில் ஒன்றாக சமீபத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ரயில் மணிக்கு 1080 கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடியது என்பதால் இது உலகத்தையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

    அவ்வளவு வேகத்தில் ஓடினாலும் ஓட்டுநர் அறையில் ஒரு கண்ணாடி குவளையில் தண்ணீர் வைத்திருந்தால், அந்த தண்ணீர் கீழே கொட்டாமல் இருக்கும். இதன் மூலம் சீரான ஓட்டத்தை புரிந்து கொள்ளலாம். வேறு பல அம்சங்களும் மற்ற ரயில்களை விட இந்த ரயிலில் சிறந்ததாக இருப்பதாகவும் கருதப்படுகிறது. 

    அதைப்போல், வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில் பொருத்தவரை பூஜ்ஜியம் வேகத்தில் இருந்து மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 52 வினாடி நேரத்தில் அடைந்துவிடும். 

    ஜப்பானில் உள்ள புல்லட் ரயில் கூட 55 வினாடி நேரத்தில் தான் அந்த வேகத்தை எட்டிருக்கிறது. கடந்த 2019 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இரண்டு ரயில்கள் தற்போது சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. இந்த ரயில் இதுவரை பயணித்த தூரம் பூமியை 18 முறை சுற்றிய தூரத்திற்கு சமம் என்றும் கூறப்படுகிறது.

    இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார். 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....