Saturday, March 16, 2024
மேலும்
    Homeவாகனம்சும்மா சர்ன்னு ரோடு இல்ல... இனி வானத்துல பறக்கலாம்..! வந்துருச்சு பறக்கும் பைக்

    சும்மா சர்ன்னு ரோடு இல்ல… இனி வானத்துல பறக்கலாம்..! வந்துருச்சு பறக்கும் பைக்

    அமெரிக்க வாகன கண்காட்சியில் உலகின் முதல் பறக்கும் பைக்கை ஜப்பானிய நிறுவனம் ஒன்று அறிமுகப்படுத்தியுள்ளது.

    ஜப்பானை சேர்ந்த நிறுவனம் ஏர்விங்ஸ். இந்நிறுவனம் தற்போது தனது தொடக்க கட்டத்தில் உள்ளது. இருப்பினும்,  ஏர்விங்ஸ் முன்னெடுத்துள்ள புதுவித பைக்கை உருவாக்கும் முறை பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 

    ஆம், ஏர்விங்ஸ் நிறுவனம் உருவாக்கியுள்ள பறக்கும் பைக்கை டெட்ராய்ட் பகுதியில் நடக்கும் வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது. ட்ரோன் போன்ற வடிவமைப்பிலான பறக்கும் தொழில் நுட்பத்துடன் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பைக் தொடர்ந்து 40 நிமிடங்கள் வரை பறக்கும் திறன் கொண்டது. 

    இதையும் படிங்க : இனி ஓவர் டைமிங் செய்ய முடியாது? தடுக்க வருகிறார் ‘குட்டி எலி’ சாம்சங் நிறுவனத்தின் புதிய அறிமுகம்!

    மேலும், இந்த பைக்கானது மணிக்கு 99 கி.மீ., வேகத்தில் பறக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பானில் இந்த பைக் விற்பனை துவங்கி விட்டதாகவும், இப்பைக்கின் சிறிய அளவை வரும் 2023-ல் அமெரிக்காவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதாகவும், இதன் விலை இந்திய மதிப்பில் ரூ.6.20 கோடி எனவும் ஏர்வின்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

     

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....