Wednesday, March 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகாஃபி ஏற்றுமதியில் இந்தியாவுக்கு அடிக்கும் ஜாக்பாட்...பியூஷ் கோயல் வெளியிட்ட தகவல்!

    காஃபி ஏற்றுமதியில் இந்தியாவுக்கு அடிக்கும் ஜாக்பாட்…பியூஷ் கோயல் வெளியிட்ட தகவல்!

    இந்தியாவின் காஃபி ஏற்றுமதி நடப்பாண்டில் ரூ.3,312 கோடியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    ஆசிய கண்டத்தை பொறுத்தவரையில், இந்தியா காஃபி ஏற்றுமதியில் முதலிடம் வகித்து வருகிறது. இந்தியாவிடம் இருந்து இறக்குமதி செய்யும் நாடுகளில் முக்கியமானவையாக ஜெர்மனி, பெல்ஜியம், இத்தாலி போன்ற நாடுகள் உள்ளன. இன்ஸ்டன்ட் காஃபி ரகங்களைத் தவிர்த்து, ரோபஸ்டா போன்ற பிற காஃபி வகைகளும் இந்தியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படுகின்றன. 

    இந்தியாவின் காஃபி ஏற்றுமதி குறித்து வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தகவல் தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதன்படி, காஃபி ஏற்றுமதி அதிகரித்துள்ளது. 

    இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கடந்த 2013-14-ஆம் நிதியாண்டின் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் நாட்டின் காபி ஏற்றுமதி ரூ.1,657 கோடியாக இருந்தது. அது, நடப்பு நிதியாண்டின் இதே மாதங்களில் ஏறக்குறைய இரு மடங்கு உயர்ந்து ரூ.3,312 கோடியாகியுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விண்வெளியில் 226 கிலோ மீட்டர் அகலமுள்ள மிதக்கும் தங்கம்: வியக்க வைக்கும் ஆச்சர்ய நிகழ்வு

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....