Tuesday, March 19, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாசோமட்டோ நிறுவனத்தில் 3% சதவீத ஊழியர்கள் பணிநீக்கம்

    சோமட்டோ நிறுவனத்தில் 3% சதவீத ஊழியர்கள் பணிநீக்கம்

    சோமட்டோ நிறுவனத்தில் பணிபுரிந்த 3% சதவீத ஊழியர்கள் பணிநீக்கம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

    உணவு டெலிவரி செய்யும் பல நிறுவனங்கள் வந்துவிட்டன. அப்படி வீட்டிற்கே வந்து உணவை விநியோகம் செய்யும் பிரபல நிறுவனங்களில் ஒன்று தான் சோமட்டோ. இந்நிலையில், இதில் ஏராளமான இளைஞர்கள் தங்கள் முழுநேர பணியாகவே இதனை செய்து வருகின்றனர். இந்நிலையில் 3 சதவீத பணியாளர்கள் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

    இப்படி பணி நீக்கம் காரணமாக, சுமார் 100 பணியாளர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், இந்தச் செயல்முறை கடந்த இரண்டு வார காலமாக நடந்து வருவதாகவும் சோமட்டோ நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

    கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதியுடன் முடிவடைந்த மூன்று மாதங்களில் சோமட்டோ நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நிகர இழப்பு 2.52 பில்லியன் என கூறப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4.30 பில்லியன் இழப்பு தொகையை விட நிகர இழப்பு வெகுவாக குறைந்துள்ளதாக தெரிகிறது. 

    அதே சமயம், சோமட்டோ நிறுவனத்தின் வருவாய் 10.24 பில்லியனில் இருந்து 16.61 பில்லியனாக உயர்ந்து இருக்கிறது. இந்நிலையில், சோமட்டோ ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவது வழக்கமான ஒன்று தான் எனவும் கூறப்பட்டுள்ளது. 

    இதனிடையே, நேற்று முன்தினம் (நவம்பர் 18) சோமட்டோ நிறுவனத்தின் இணை நிறுவனர் மோஹித் குப்தா தனது பதிவிலிருந்து விலகியதும் குறிப்பிடத்தக்கது.

    தங்கம் விலை அதிரடி சரிவு..! சவரனுக்கு எவ்வளவு குறைவு தெரியுமா?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....