Sunday, March 17, 2024
மேலும்
    Homeஅறிவியல்விண்வெளியில் 226 கிலோ மீட்டர் அகலமுள்ள மிதக்கும் தங்கம்: வியக்க வைக்கும் ஆச்சர்ய நிகழ்வு

    விண்வெளியில் 226 கிலோ மீட்டர் அகலமுள்ள மிதக்கும் தங்கம்: வியக்க வைக்கும் ஆச்சர்ய நிகழ்வு

    226 கிலோ மீட்டர் அகலமுள்ள விண்வெளியில் மிதக்கும் தங்கம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

    இந்த பூமியைத் தாண்டி செயற்கோள்களை நாம் விண்ணில் செலுத்தி பல அறிவியல் உண்மைகளை தெரிந்து கொண்டு இருந்தாலும், வானியலில் நாம் சிறு மைல் கல்லை கூட கடக்கவில்லை என்பது தான் அனைவரும் அறிந்த உண்மை.  காரணம் தினம் தினம் நம்மை வியப்பில் ஆழ்த்தும் பல நிகழ்வுகள் நடந்துகொண்டே இருக்கின்றன. 

    நிலா காட்டி சோறு ஊட்டிய காலம் சென்று, தற்போது நிலவுக்கே சென்று பயிர் செய்து சோறு சாப்பிடும் காலம் வந்துவிட்டது என்றால் அது இப்போது வியப்படைவதற்கு இல்லை. அந்த அளவிற்கு ஒவ்வொரு நாளும் அறிவியலும் நாமும் எதை நோக்கியோ சென்று கொண்டு தான் இருக்கிறோம். 

    அந்த வகையில் ஒரு அதிசய மட்டுமல்ல நம்மை ஆச்சரியமடையவைக்கும் ஒன்றை வானியல் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். 

    பொதுவாக ஒவ்வொரு கோள்களுக்கும் இடையே எண்ணில் அடங்காத அளவுக்கு விண் கற்கள் உலாவிக் கொண்டிருக்கின்றன. தற்போது வியாழன், செவ்வாய் கோள்களுக்கு இடையே சைக்கி என்று பெயரிடப்பட்ட விண்கல் ஒன்று வலம் வந்து கொண்டிருக்கிறது. இதில் என்ன ஆச்சர்யம் இருக்கிறது என்று கேட்கலாம்? 

    உண்மையில் அது சாதாரண விண்கல் இல்லை. 226 கிலோ மீட்டர் அகலமுள்ள அந்த விண்கல்லில் இரும்பு, தங்கம், நிக்கல், போன்ற உலோகங்கள் இருக்கும் என ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். அதவாது இதன் மதிப்பு சுமார் 10 ஆயிரம் குவாடிரில்லியன் டாலர்களாக இருக்கலாம் என நாசா விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் கணக்கிட்டுள்ளது. அப்படி என்று பார்த்தால், பூமியில் இருக்கும் பொருளாதார மதிப்பினை விட பல மடங்கு அதிகம் ஆகும். அந்த அளவிற்கு இந்த சைக்கி விண்கல்லில் கனிமங்கள் புதைந்து உள்ளன. 

    அதன் காரணமாக குறைந்த செலவில் திட்டமிட்டுள்ள நாசா, ரோபோடிக் தொழில்நுட்பத்தை பயன்படுத்த முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் விண்கல்லில் உள்ள கனிமங்களின் அளவு காந்தப்புலம் ஆகியவற்றை ஆய்வு செய்யவும் அவற்றின் மேற்பரப்பை படம் எடுக்கவும் திட்டமிட்டுள்ளது. நாசா விண்கலம் இந்த திட்டத்தை நோக்கிய பயணத்தை அடுத்த ஆண்டு தொடங்க உள்ளது. அதே சமயம் இந்த திட்டத்தின் ஆய்வு முடிவுகள் நம்மை வியக்கவும் வைக்கலாம்..

    விண்வெளியில் இருந்து ஒலி கேட்கிறதா? குழப்பத்தில் ஆராய்ச்சியாளர்கள் !

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....