Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஜூஸ் என நினைத்து பினாயிலைக் குடித்த மாணவன் பலி

    ஜூஸ் என நினைத்து பினாயிலைக் குடித்த மாணவன் பலி

    தென்காசியில் ஜூஸ் என நினைத்து பினாயிலைக் குடித்து ஏழாம் வகுப்பு மாணவன் உயிரிழந்துள்ள சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

    தென்காசி மாவட்டம், முதலியார்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் முகம்மது அமீன். இவரது மகன் முகம்மது பீர்மைதீன். 12 வயதாகும் பீர்மைதின் அதே பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் ஏழாம் வகுப்பு படித்து வந்தார். 

    இந்நிலையில், முகம்மது பீர்மைதீன் கடந்த 17-ம் தேதி தன் வீட்டில் இருந்த பினாயில் பாட்டிலை ஜூஸ் என நினைத்து தவறுதலாகக் குடித்துவிட்டார். இதை எதேச்சையாகப் பார்த்த அவனது தாய் சரபுள்பானு உடனே ஓடிவந்து பினாயில் பாட்டிலைத் தட்டிவிட்டுள்ளார். 

    இருப்பினும், முகம்மது பீர்மைதீன் சிறுது நேரத்தில் மயங்கியுள்ளார். இதையடுத்து, அவரது குடும்பத்தினர் மாணவனை தென்காசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். 

    ஆனால், அங்கிருந்து மேல்சிகிச்சைக்காக முகம்மது பீர்மைதீன் திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், நேற்று நள்ளிரவு சிகிச்சைப் பலனின்றி அவர் உயிர் இழந்தார். ஜூஸ் என நினைத்து பினாயிலைக் குடித்து ஏழாம் வகுப்பு மாணவன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    காலநிலை அபாயத்தில் இருக்கும் இந்தியாவின் 9 மாநிலங்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....