Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்ரீ-ரிலிஸானது வாரிசு; குஷியில் ரசிகர்கள்!

    ரீ-ரிலிஸானது வாரிசு; குஷியில் ரசிகர்கள்!

    நடிகர் விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு படம் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. 

    நடிகர் விஜய்யின் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 11-ஆம் தேதி வெளிவந்த படம் வாரிசு. பிரபல இயக்குநர் வம்சி இயக்கத்தில் உருவான இப்படத்திற்கு தமன் இசையமைத்திருந்தார். தில் ராஜு இப்படத்தை தயாரித்திருந்தார். முழுக்க முழுக்க குடும்ப படமாக மட்டுமே வாரிசு இருக்கும் என முன்பே கூறப்பட்டது. படமும் அதன்படியே இருந்தது. 

    பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான வாரிசு படத்திற்கு கலவையான விமர்சனங்களே கிட்டியது. ஆயினும் படத்தின் வசூல் என்பது அதிகளவில் இருந்தது. குடும்பங்களின் ஆதரவு வாரிசுக்கு அதிகளவு கிடைத்தது என்றே சொல்லலாம். 

    இதுவரையில், வாரிசு ரூ. 350 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வந்துள்ள நிலையில், தற்போது அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வாரிசு படம் வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் ஆனந்தத்தில் உள்ளனர். 

    மேலும், வாரிசு படத்தின் நீளம் காரணமாக படத்தில் இருந்து சில காட்சிகள் நீக்கப்பட்டன. இந்த காட்சிகள் யூடியூப் தளத்தில் விரைவில் வெளியாகக்கூடும் என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

    தாயா? சேயா? இக்கட்டான அறுவை சிகிச்சை – சாதித்துகாட்டிய மருத்துவர்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....