Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்இந்தியாகாலநிலை அபாயத்தில் இருக்கும் இந்தியாவின் 9 மாநிலங்கள்

    காலநிலை அபாயத்தில் இருக்கும் இந்தியாவின் 9 மாநிலங்கள்

    சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் காலநிலை மாற்றத்தால் அதிக அபாயத்தை எதிர்கொள்ளும் உலகின் முதல் 50 பிராந்தியங்களின் பட்டியலில் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.

    சுற்றுச்சூழல் பாதிப்பு மற்றும் காலநிலை மாற்றத்தால் அதிக அபாயத்தை எதிர்கொள்ளும் உலகின் முதல் 50 பிராந்தியங்களின் பட்டியலை சர்வதேச ஆய்வறிக்கை ஒன்று வெளியிட்டு உள்ளது. 

    கிராஸ் டிபென்டன்சி இனிஷியேடிவ் என்ற அமைப்பு கட்டடங்கள், வீடுகள், சாலைகள் போன்ற மனிதர்களால் உருவாக்கப்பட்ட அடிப்படை கட்டமைப்புகளால் உண்டாகும் காலநிலை மாற்றத்தை குறித்து பகுப்பாய்வு செய்தது. அதன்படி சர்வதேச காலநிலையில் ஆபத்தை எதிர்நோக்கியுள்ள மாநிலங்கள் மற்றும் மாகாணங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

    அந்த ஆய்வறிக்கையில், மழை, வெள்ளம், காட்டுத் தீ மற்றும் கடல் மட்டம் உயர்வு போன்ற வானிலை, காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கும் பகுதிகளின் தரவரிசை கொடுக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள 2,600-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் மற்றும் மாகாணங்களில் இந்திய நாடும் இடம்பெற்றுள்ளது. 

    மேலும் அந்த ஆய்வறிக்கையில், 2050 ஆம் ஆண்டில் மிகவும் ஆபத்தில் இருக்கும் முதல் 50 மாநிலங்கள் மற்றும் மாகாணங்கள் கொண்ட பட்டியலில் 80 சதவீதம் சீனா, அமெரிக்கா மற்றும் இந்தியாவில் இடம்பெற்றுள்ளன. 

    அந்தப் பட்டியலில் காலநிலை அபாயத்தில் சீனாவுக்கு அடுத்தப்படியாக இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான மாநிலங்கள் உள்ளன. இதில், பிகார் 22-வது இடத்திலும், உத்தரப் பிரதேசம் 25-வது இடத்திலும், அசாம் 28-வது இடத்திலும், ராஜஸ்தான் 32-வது இடத்திலும் இடம்பெற்றுள்ளன. 

    இதற்கு அடுத்தப்படியாக மராட்டியம் 38-வது இடத்திலும், பஞ்சாப் 50-வது இடத்திலும், கேரளா 52-வது இடத்திலும் இடம்பெற்றுள்ளன. 

    முன்னதாக நடத்தப்பட்ட கணக்கெடுப்பைவிட தற்போது வெளியாகியுள்ள காலநிலை மாற்றத்திற்கான கணக்கெடுப்பு மிகவும் ஆபத்தை விளைவிக்க கூடியதாக பார்க்கப்படுகிறது. 

    தாயா? சேயா? இக்கட்டான அறுவை சிகிச்சை – சாதித்துகாட்டிய மருத்துவர்கள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....