Wednesday, March 20, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கான செலவுகளை குறைத்து உக்ரைன் மக்களுக்கு உதவ வேண்டும்; போப் ஆண்டவர்

    கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்திற்கான செலவுகளை குறைத்து உக்ரைன் மக்களுக்கு உதவ வேண்டும்; போப் ஆண்டவர்

    கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்திற்கான செலவுகளை குறைத்து உக்ரைன் மக்களுக்கு உதவ வேண்டும் என போப் ஆண்டவர் வேண்டுகோள் வைத்துள்ளார். 

    உக்ரைன் நேட்டோவில் இணைய விருப்பம் தெரிவித்ததை அடுத்து ரஷ்யா உக்ரைன் மீது போர் தொடுத்தது. பல மாதங்களாக இரு நாடும் தொடர்ந்து போரில் ஈடுபட்டு வருகிறது. இதில் ஏராளமான உக்ரைன் மக்கள் கொல்லப்பட்டனர். மேலும் உக்ரைன் நாட்டு மக்கள் பெரும்பாலானோர் அண்டை நாடுகளுக்கு தஞ்சம் புகுந்தனர். இந்தப் போரில் உக்ரைன் நாட்டில் பலத்த பொருட்சேதமும் உயிர் சேதமும் ஏற்பட்டுள்ளது.

    இந்நிலையில், கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாட்டத்திற்கான செலவுகளை குறைத்துக்கொண்டு போரால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களுக்கு கொடுத்து உதவ வேண்டும் என போப் ஆண்டவர் கோரிக்கை வைத்துள்ளார். 

    இது தொடர்பாக பேசிய போப் பிரான்சிஸ், உக்ரைன் மக்கள் குளிரிலும், பசியிலும் வாடி வருவதாகவும், மருத்துவ வசதி பற்றாக்குறை காரணமாக பலர் தங்களது உயிரை இழந்திருப்பதாகவும் இதனை மறக்க கூடாது என்றும் தெரிவித்தார். மேலும் உக்ரைன் மக்களின் இதயங்களில் அமைதியும், மகிழ்ச்சியும் ஏற்படும் வகையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்கள் அமைய வேண்டும் என்று கூறினார். 

    போரினால் பாதிக்கப்பட்ட உக்ரைன் மக்களுக்கு தேவையான உதவிகளை வாடிகன் பேராலயம் ஒருங்கிணைத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    ஒரே வீட்டில் இருந்து இரண்டு முதல்வர்களை கூட அறிவிக்கலாம்- அமமுக பொதுச்செயலாளர்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....