Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்வர்த்தகம்சீன நிறுவனங்களுக்கு இந்தியாவில் பாரபட்சமா? - சீன அமைச்சர் கருத்து!

    சீன நிறுவனங்களுக்கு இந்தியாவில் பாரபட்சமா? – சீன அமைச்சர் கருத்து!

    இந்திய அதிகாரிகள், சீன நிறுவனங்களுக்கு நியாயமான மற்றும் பாரபட்சமற்ற வணிகச் சூழலை வழங்குவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம் என்று சீன வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

    பண மோசடி வழக்கில், கடந்த 5-ம் தேதி இந்தியா முழுவதும் சீனாவை சேர்ந்த கைப்பேசி நிறுவனமான விவோ-உடன் தொடர்புடைய 44 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

    இந்நிலையில், இச்சோதனைக் குறித்து சீன வெளியுறவுத்துறை அமைச்சர் ஜாவோ லிஜியான் இது குறித்து தெரிவித்துள்ளதாவது:

    “நான் ஏற்கனவே பலமுறைக் கூறியதைப்போல, சீன நிறுவனங்களிடம்  சட்டத்திட்டங்களை பின்பற்றி நிறுவனங்களை நடத்த வேண்டும் என்று சீன அரசு எப்போதும் வலியுறுத்தி வருகிறது. 

    அதே சமயத்தில், சீன நிறுவனங்களின் சட்டப்பூர்வ உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். 

    மேலும், இந்திய அதிகாரிகள், இந்தியாவில் முதலீடு செய்து செயல்படும் சீன நிறுவனங்களுக்கு நியாயமான மற்றும் பாரபட்சமற்ற வணிகச் சூழலை வழங்குவார்கள் என்று நாங்கள் நம்புகிறோம்.” என்று தெரிவித்துள்ளார். 

    இந்நிகழ்வு குறித்து புதுதில்லியில், சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், சீன நிறுவனங்களில் இந்திய அதிகாரிகள் அடிக்கடி நடத்தும் சோதனைகள், அவர்களின் இயல்பான வணிகத்தைச் சீர்குலைக்கிறது. இது இந்தியாவின் வணிகச் சூழலையும் பாதிக்கிறது என்றார். 

    மேலும், ” இத்தகைய சோதனைகள் இந்தியாவில் முதலீடு செய்யும் சீன நிறுவனங்கள் உள்பட பிற நாடுகளின் நிறுவனங்களையும் பாதிப்படைய செய்கிறது. சீனா- இந்தியா இடையே வர்த்தக ரீதியிலான உடன்படிக்கைகள் எப்போதும் இரு தரப்பினருக்கும் வெற்றியைத் தருகிறது.”  என்றும் சீனத் தூதரகத்தின் செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டுள்ளார். 

    இப்படியாக சீன அதிகாரிகள் தங்களது கருத்துகளை தெரவித்து வரும் நிலையில், நாங்கள் இந்திய அதிகாரிகளின் விசாரணைக்கு முழுவதுமாக ஒத்துழைப்பு வழங்கி வருகிறோம் என்று விவோ நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். 

    அடுத்தடுத்து பதவி விலகும் இங்கிலாந்து அமைச்சர்கள்!!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....