Wednesday, March 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்சீனாவில் பிரேக் அப் செய்த பெண்; உலகெங்கும் வைரலான சம்பவம்...

    சீனாவில் பிரேக் அப் செய்த பெண்; உலகெங்கும் வைரலான சம்பவம்…

    சீனாவில் ஒரு பெண் தன் காதலனை பிரேக் அப் செய்த காரணம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    காதல் என்பது நெடுங்காலமாக உள்ளது. ஆனால் அவ்வபோது காதல் காலத்துக்கு ஏற்றவாறு மாறுகிறது. தற்போதையக் காலக்கட்டத்தில் காதலும் சரி, பிரேக்-அப்பும் சரி வெளிப்படையாகவே நிகழ்கிறது. இப்படி நிகழ்வது மிகவும் சாதாரணமாகிவிட்டது. 

    காதல் வருவதற்கான காரணங்களும், பிரேக் அப் செய்வதற்கான காரணங்களும் அதிகளவில் தற்போது வெளியில் தெரிகின்றன. அந்த வகையில் சீனாவில் ஒரு பெண் தன் காதலனை பிரேக் அப் செய்த காரணம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    ஒரு பெண் தனது காதலன்‌ வீட்டிற்கு முதன்முதலாக சென்றுள்ளார். அங்கு அந்தப் பெண்ணுக்கு நேர்ந்த விஷயம் அப்பெண்ணை காதலை முறித்துவிடலாம் என்ற அளவுக்குத் தள்ளியுள்ளது. 

    அதாவது, அப்பெண் தனது காதலனின் குடும்பத்துடன் உணவருந்த அமர்ந்துள்ளார். அப்போது அவருக்கு வைக்கப்பட்ட உணவில் பொரித்த முட்டைகளுடன்‌ நூடுல்ஸ்‌, பூசணீ போரிட்ஜ்‌, வறுத்த குளிர்‌ உணவுகள் போன்றவை இடம்பெற்றிருந்தன. இந்த உணவு வகைகள் அப்பெண்ணை ஏமாற்றத்திற்கு உள்ளாக்கியுள்ளது. 

    மேலும், காதலன் வீட்டில் தனக்கென்று ஸ்பெஷலாக எதையும் செய்யாதது குறித்து கவலை அடைந்துள்ளார். இது குறித்து காதலனிடம் கேட்டபோது ‘ஒரு சாதாரண மனிதன்‌ தினசரி சாப்பிடும்‌ உணவு இது.’ என்று தெரிவித்துள்ளார். ஆனால், அப்பெண்ணுக்கு நூடுல்ஸ் பிடிக்காது என்பது அவரது காதலனுக்கு தெரியும். இருப்பினும், தொடர்ந்து இந்த உணவையே காதலனின் குடும்பத்தார் அளித்ததால் அப்பெண் தொடர்ந்து ஏமாற்றத்திற்கு உள்ளாகினார். 

    இதனால், காதலன் வீட்டில் இரு நாட்கள் தங்கியப்பிறகு அவர் காதலனை பிரேக் அப் செய்யலாம் என முடிவுக்கு வந்து வீட்டை விட்டு வெளியேறியுள்ளார். இந்நிகழ்வை அப்பெண் தனது சமூகவலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு சீனா மட்டுமல்லாது உலகளவில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    துணிவு மற்றும் வாரிசு ஓடிடி ரிலீஸில் மாற்றம் – வெளிவந்த தகவல்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....