Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்துணிவு மற்றும் வாரிசு ஓடிடி ரிலீஸில் மாற்றம் - வெளிவந்த தகவல்

    துணிவு மற்றும் வாரிசு ஓடிடி ரிலீஸில் மாற்றம் – வெளிவந்த தகவல்

    துணிவு திரைப்படம் நெட்ஃபிளிக்ஸிலும், வாரிசு திரைப்படம் அமேசான் பிரைமிலும் வெளியாகவுள்ளது.

    விஜய் – அஜித்குமார் இருவரும் தமிழ்த் திரையுலகின் மிக முக்கியமான முன்னணி நட்சத்திரங்கள் என்பது மறுக்க முடியாத ஒன்றாகும். இருவரின் திரைப்படங்களும் திரையரங்குகளில் வெளியாகும் நாள் திருவிழாவாக மாறிவிடுகிறது. அப்படியான திருவிழாவை விஜய்யின் வாரிசு திரைப்படம் மூலமும், அஜித்குமாரின் துணிவு திரைப்படமும் இன்று பல திரையரங்குகள் கண்டு வருகிறது. 

    வம்சி இயக்கி, தமன் இசையமைத்திருக்கும் வாரிசு திரைப்படமும், எச்.வினோத் இயக்கி, ஜிப்ரான் இசையமைத்திருக்கும் துணிவு திரைப்படமும் ரசிகர்களிடம் ஒரே மாதிரியான வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்நிலையில், இரு திரைப்படங்களின் ஓடிடி உரிமம் குறித்த தகவல்கள் வெளிவந்துள்ளது. அதன்படி, துணிவு திரைப்படம் நெட்ஃபிளிக்ஸிலும், வாரிசு திரைப்படம் அமேசான் பிரைமிலும் வெளியாகவுள்ளது. ஆனால், வெளியாகும் தேதி இதுவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.

    பொதுவாக, திரையரங்கில் வெளிவந்து 25 நாட்களுக்குப் பிறகு ஓடிடியில் திரைப்படங்கள் வெளிவருவது வழக்கம். ஆனால், துணிவு மற்றும் வாரிசு திரையரங்குகளில் அதிக நாட்கள் ஓடும் என்பதால் 30 முதல் 40 நாட்களுக்கு பிறகே வெளியாகும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

    வாரிசு மற்றும் துணிவு படங்களை இணையத்தில் வெளியிட தடை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....