Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்70 சதவீதத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பா?

    70 சதவீதத்திற்கும் அதிகமானோர் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்பா?

    சீனாவின் ஷாங்காய் நகர மக்களில் 70 சதவீதத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய பேரிடராக, நீங்கா நினைவில் இடம் பிடித்து விட்டது கொரோனா. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சீனாவில் தொடங்கிய இந்த வைரஸ், உலகின் அனைத்து நாடுகளையும் புரட்டி எடுத்து விட்டது என்று தான் சொல்ல வேண்டும். உலகமெங்கும் ஊரடங்கு, தனிமைப்படுத்துதல் போன்ற அவசர கால நடவடிக்கைகள் அத்தியாவசிய நடவடிக்கைகள் ஆகிப்போகின. 

    முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை கடை பிடிப்பதும் அன்றாட வாழ்க்கையின் அம்சங்கள் ஆகிப்போனது. அதனைத் தொடர்ந்து ஒன்று, இரண்டு மற்றும் மூன்று என பலவிதமான ஊரடங்குகள் வந்து சென்றாகி விட்டது.

    இந்தச் சூழலில்தான், 2021-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இருந்து கொரோனா தொற்று குறைந்து வருவதாக, கொரோனா விதிகள் தளர்த்தப்பட்டன. கொரோனாவின் பிறப்பிடமாக கருதப்படும் சீனாவும் சமீபத்தில்தான் கொரோனா கட்டுப்பாடுகளை தளர்த்தியது. 

    இந்நிலையில், சீனாவில் கொரோனா மீண்டும் தலை தூக்க ஆரம்பித்துள்ளதாகவும், அதனால் உயிரிழப்பு நேர்வதாகவும் தகவல்கள் வெளியாகின. இதைத்தொடர்ந்து, உலகின் வெவ்வேறு நாடுகளிலும் கொரோனா அதிகரிப்பது அதிகார்ப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இச்சூழலில், சீனாவின் ஷாங்காய் மாகாணத்தில் உள்ள பிரபல மருத்துவமனையின் ஆலோசகர் தெரிவித்துள்ள செய்தி பெரிய முக்கியத்துவம் பெற்றுள்ளது. 

    அவர் தெரிவித்துள்ளதாவது; 

    சீனாவில் வேகமாக கொரோனா பரவி வருகிறது. பொதுமக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, 70 சதவீத ஷாங்காய் நகர மக்கள் வரும் 2 மாத காலத்தில் கொரோனாவால் பாதிக்கப்படலாம். வரும் பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் இந்த அளவுக்கு கொரோனா பாதிப்பு அதிகரிக்கக்கூடும்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். 

    மும்பை மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறாரா ரிஷப் பந்த்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....