Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்பாலியல் புகார்; காவல்துறை மீது அழுத்தம் உள்ளதா? - அண்ணாமலை கேள்வி..

    பாலியல் புகார்; காவல்துறை மீது அழுத்தம் உள்ளதா? – அண்ணாமலை கேள்வி..

    பெண் காவலரிடம் அத்துமீறியவர்கள் மீது தாமதமான நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார். 

    தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். 

    அப்போது அவர், காயத்ரி ரகுராம் விலகியதால் தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்றும், தனது பாலிசி கட்சியில் இருந்து யார் விலகினாலும் வாழ்த்தி வழி அனுப்புவது தான் என்றும் கூறினார். மேலும், எங்கு சென்றாலும் அவர்கள் நன்றாக இருக்க வேண்டும் என்றும், வாழ்க்கையில் நினைத்தது எல்லாம் கிடைக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 

    கட்சியில் இருந்து வெளியே செல்வோர் தன்னையோ கட்சியையோ புகழ்ந்துவிட்டு செல்ல வேண்டும் என்பது கட்டாயமில்லை என தெரிவித்த அண்ணாமலை, மகளிர் அதிக அளவில் பாஜகவை நோக்கி வருவதாகவும், யாரோ ஒருவருக்கு பிடிக்கவில்லை என்பதால் கட்சியை விட்டு போகிறார்கள் என்றால் தனுக்கு அதில் எந்த வருத்தமும் கிடையாது எனவும் கூறினார். 

    அனைவரும் தன் மீது விமர்சனம் வைப்பதாகவும், அதற்கான பதில் தன்னுடைய மௌனம் தான் என்றும் அண்ணாமலை தெரிவித்தார். 

    தொடர்ந்து பேசிய அண்ணாமலை, பெண் காவலரிடம் அத்துமீறியவர்கள் மீது தாமதமான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், பாஜகவின் தொடர் வலியுறுத்தலால் 2 நாட்களுக்கு பிறகு எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், காவல்துறை மீது அழுத்தம் உள்ளதா என கேள்வி எழுவதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.

    மும்பை மருத்துவமனைக்கு மாற்றப்படுகிறாரா ரிஷப் பந்த்?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....