Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்நிலாவைக் கைப்பற்றுகிறதா சீனா?

    நிலாவைக் கைப்பற்றுகிறதா சீனா?

    நிலாவைக் கைப்பற்றப்போவதாக அமெரிக்கா சீனா வைத்துள்ள குற்றச்சாட்டினை வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மறுத்துள்ளார்.

    சீனாவின் ராணுவ நடவடிக்கைகளில் ஒன்றாக நிலவை முழுவதுமாக கைப்பற்றப்போகிறது என சனிக்கிழமை (ஜூலை 02) அமெரிக்கா வைத்திருந்த குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.

    நிலாவினை ஆராயும் பொருட்டு சீன அரசு கடந்த பத்து ஆண்டுகளாக பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 2013ம் ஆண்டு ஆளில்லா விண்கலத்தை சீனா  முதல் முறையாக நிலவுக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது. 2030ம் ஆண்டின் இறுதிக்குள் மனிதர்கள் அடங்கிய விண்கலத்தை அனுப்பவும் சீனா திட்டமிட்டுள்ளது.

    இந்நிலையில், அமெரிக்க வானியல் நிறுவனத்தின் தலைவர், சீனாவின் விண்வெளி திட்டம், ஒரு ராணுவ உள்நோக்கத்துடன் செயல்படுத்தப்படுகிறது. பல்வேறு நாடுகளிடம் இருந்து சீனா தொழில்நுட்பத்தையும், சிந்தனைகளையும் திருடுகிறது என்ற குற்றச்சாட்டினை முன்வைத்தார்.

    அமெரிக்காவின் இந்த குற்றச்சாட்டுக்கு பதில் அளித்த சீனாவின் வெளியுறவு செய்தித் தொடர்பாளர் ஜாவோ லிஜியன், ‘சீனா மீது இந்த மாதிரியான குற்றச்சாட்டுகளை அமெரிக்கா வைப்பது இது முதல் முறை அல்ல.’

    ‘சீனாவின் பொதுவான மற்றும் அர்த்தமுள்ள விண்வெளி ஆராய்ச்சிகளுக்கு தொடர்ச்சியாக அமெரிக்கா அர்த்த மற்ற பிரசாரத்தினை மேற்கொண்டு வருகிறது. சீனா எப்பொழுதும் வருங்கால சந்ததிக்கான விண்வெளி ஆராய்ச்சியினை மேம்படுத்துகிறது. மேலும் ஆயுதங்களுக்கு எதிரான கொள்கையினையும் கொண்டுள்ளது’ எனக் கூறியுள்ளார்.

    ஆர்ட்டெமிஸ் எனப்படும் திட்டத்தின் கீழ் நாசா மனிதர்களை நிலவின் தெற்கு துருவத்துக்கு 2025க்குள் அனுப்ப திட்டமிட்டுள்ளது. அதுபோல சீனா, ஆளில்லா விண்கலங்களை 2030ம் ஆண்டுக்குள் நிலவின் தென் துருவத்தை நோக்கி அனுப்ப திட்டமிட்டுள்ளது. 

    நிலவை நோக்கி பயணத்தைத் தொடங்கிய செயற்கைகோள்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....