Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்சீனாவில் மாடலிங் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை; அதிர்ச்சியில் மக்கள்!

    சீனாவில் மாடலிங் பெண்களுக்கு விதிக்கப்பட்டுள்ள தடை; அதிர்ச்சியில் மக்கள்!

    மாடலிங்கில் பணி செய்யும் பெண்கள் உள்ளாடை தொடர்பான விளம்பரங்களில் நடிப்பதற்கு சீனாவில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

    சீனாவில் அவ்வபோது பொதுமக்கள் அதிர்ச்சி அடையும் விதமாக கட்டுப்பாடுகள் அமல்படுத்துவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த வகையில், புதியதொரு கட்டுப்பாட்டை பெண்களுக்கு சீன அரசு விதித்துள்ளது. அதாவது, மாடலிங்கில் பணி செய்யும் பெண்கள் உள்ளாடை தொடர்பான விளம்பரங்களில் நடிப்பதற்கும், லைவ் ஸ்ட்ரீமிங் செய்வதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

    இதனால் சீனாவில் உள்ளாடை விளம்பரங்களில் பெண்களுக்கு பதிலாக ஆண்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர். சீனாவை பொறுத்தவரை அங்கு லைவ் ஸ்ட்ரீமிங் காட்சிகளுக்கான வர்த்தகம் அதிகம் என்று அங்குள்ள வர்த்தக நிறுவனங்கள் தெரிவிக்கின்றன. இதனாலேயே லைவ் ஸ்ட்ரீமிங்கை புறக்கணிக்காமல் ஆண்கள் பலர் தற்போது பெண்கள் பயன்படுத்தும் உள்ளாடைகளுக்கு மாடல்களாக நடித்து வருவதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

    இதற்கிடையே, பெண்களுக்கு பதிலாக ஆண்கள் நடிக்கும் விளம்பரங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்ட் ஆகி வருகிறது. ஆபாச ரீதியான வீடியோக்களை தடுக்கவே இந்த தடை கொண்டுவரப்பட்டதாக சீன அரசால் கூறப்பட்டுள்ளது. இந்நிலையில், இது பெண்களின் வேலை வாய்ப்பை பறிக்கும் செயல் என்று பெண்கள் நல அமைப்புகள் குரல் எழுப்பி வருகின்றன.

    இயல்பாகவே சீனாவில் குடிமக்களுக்கு ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன. பொது இடங்களில் போராட்டம் நடத்த தடை, அரசுக்கு எதிரான கருத்துக்கு தடை, சமூக வலைதளங்களுக்கு தணிக்கை உள்ளிட்ட ஏராளமான கட்டுப்பாடுகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

    மீண்டும் சுற்றுலா கிளம்பும் அஜித்குமார்.. ஏகே 62-வின் நிலைமை என்ன?

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....