Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்மீண்டும் சுற்றுலா கிளம்பும் அஜித்குமார்.. ஏகே 62-வின் நிலைமை என்ன?

    மீண்டும் சுற்றுலா கிளம்பும் அஜித்குமார்.. ஏகே 62-வின் நிலைமை என்ன?

    நடிகர் அஜித்குமார் உலக மோட்டார் சைக்கிள் சுற்றுப் பயணத்தை விரைவில் மேற்கொள்ள இருக்கிறார் என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. 

    நடிகர் அஜித்குமார் நடிப்பில் கடந்த ஜனவரி மாதம் 11-ஆம் தேதி வெளிவந்த படம் துணிவு. இப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும் வசூல் ரீதியாக மாபெரும் வெற்றிப்பெற்றது. துணிவு படத்திற்கு பிறகான அஜித்குமாரின் படம் குறித்த கேள்விகள் சமூகவலைதளங்களில் வைரலாகி வருகின்றன. 

    தற்சமயம், அஜித்குமாரின் 62-ஆவது படத்தை தடம் புகழ் மகிழ் திருமேனி இயக்கவுள்ளதாகவும், அனிரூத் இப்படத்திற்கு இசையமைக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. விரைவில் இத்தகவல்கள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    இந்நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பை முடித்துவிட்டு நடிகர் அஜித்குமார் உலக மோட்டார் சைக்கிள் சுற்றுப் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார் என்றும், இந்தப் பயணத்துக்கு ‘பரஸ்பர மரியாதை பயணம்’ (Ride for mutual respect) எனப் பெயரிடப்பட்டுள்ளது என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது. இத்தகவலை அஜித்தின் மேனேஜர் சுரேஷ் சந்திரா உறுதிபடுத்தியுள்ளார். 

    முன்னதாக, ‘துணிவு’ படத்தின்போது மோட்டார் சைக்கிளில் உலக சுற்றுப் பயணத்தை அஜித் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ‘மருந்து வாங்கக் கூட பணம் இல்லை’ – ரஜனியிடம் உதவி கேட்கும் தயாரிப்பாளரின் உருக்கமான வீடியோ!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....