Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'மருந்து வாங்கக் கூட பணம் இல்லை' - ரஜினியிடம் உதவி கேட்கும் தயாரிப்பாளரின் உருக்கமான வீடியோ!

    ‘மருந்து வாங்கக் கூட பணம் இல்லை’ – ரஜினியிடம் உதவி கேட்கும் தயாரிப்பாளரின் உருக்கமான வீடியோ!

    எல்லோரும் கைவிட்ட நிலையில் உங்கள் உதவியை கேட்கிறேன். மருந்து வாங்கக் கூட பணம் இல்லை என பிரபல தயாரிப்பாளர் நடிகர் ரஜினிகாந்தை குறிப்பிட்டு சமூவலைதளத்தில் வீடியோ வெளியிட்டுள்ளார். 

    இயக்குநர் பாலா இயக்கத்தில் விக்ரம், சூர்யா இணைந்து நடித்த ’’பிதாமகன்’’ படத்தை தயாரித்தவர், எவர் கிரின் மூவிஸ் விஏ துரை. இவர் தயாரிப்பு நிர்வாகியாக சத்தியராஜ் நடித்த ’’என்னம்மா கண்ணு’’, விஜயகாந்த் நடித்த ’’கஜேந்திரா’’, ரஜினி தயாரித்த ’’பாபா’’ போன்ற படங்களில் பணியாற்றினார். மிகவும் பிரபலமான ஒருவராக இவர் திகழ்ந்தார். 

    ஆனால், மிகப்பெரிய பொருட்செலவில் தயாரிக்கப்பட்ட ’’கஜேந்திரா’’ படம் பெரிய தோல்வியைத் தழுவியதால், எவர் கிரின் மூவிஸ் வி.ஏ.துரை-க்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது. இதனால், அடுத்தடுத்த படங்களை அவரால் தயாரிக்க முடியவில்லை. 

    மேலும், கடந்த பத்து வருடமாக மனைவி மற்றும் தனது ஒரே மகளை பிரிந்து, கஷ்டப்பட்டு சம்பாதித்த பணம், பொருட்களை இழந்து சாலிகிராமத்தில் உள்ள அவரது நண்பர் ஒருவரின் வீட்டில் வாழ்வாதாரத்தை இழந்து வசித்து வருகிறார்.

    இந்நிலையில், உடல்நலக் கோளாறால் அவதிப்பட்டு வரும் வி.ஏ.துரை சமூகவலைதளத்தில் உதவி நாடி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், ‘’ ரஜினி சார் நான் சக்கரை நோயால் பாதிக்கப்பட்டு நடக்க முடியாத நிலையில் உள்ளேன். எல்லோரும் கைவிட்ட நிலையில் உங்கள் உதவியை கேட்கிறேன். மருந்து வாங்கக் கூட பணம் இல்லை, அதனால் ஏதாவது எனக்கு உதவி செய்யுங்கள்’’ என கண்ணீர் மல்க வி.ஏ.துரை கோரிக்கை விடுத்துள்ளார்.

    முன்னதாக, நடிகர் சூர்யா வி.ஏ.துரையின் மருத்துவ செலவுகளுக்காக ரூ.2 லட்சம் கொடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

    டபிள்யுபிஎல்: பெங்களூர் அணியை பதம் பாரத்த மும்பை இந்தியன்ஸ்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....