Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஅறிஞர் அண்ணாவின் நினைவுநாள்; மு.க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை

    அறிஞர் அண்ணாவின் நினைவுநாள்; மு.க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்து மரியாதை

    அறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி சென்னை மெரினாவில் இருக்கும் அவரது நினைவிடத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்தும், மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். 

    தமிழக முன்னாள் முதல்வர் அறிஞர் அண்ணாவின் 54-வது நினைவுநாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதன் காரணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவின் அமைதிப்பேரணி நடைபெற்றது. 

    இந்தப் பேரணி சென்னை, வாலாஜா சாலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் திமுக முக்கிய நிவாகிகளும் தொண்டர்களும் அமைதியாக நடந்து அண்ணா நினைவிடத்திற்கு சென்றனர். 

    அண்ணாவின் நினைவு தினத்தை முன்னிட்டு அவரது நினைவு இடம் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து, அமைதிப் பேரணியாக வந்த முதல்வர் மு.க. ஸ்டாலின் மலர் வளையம் வைத்தும் மலர் தூவியும் மரியாதை செலுத்தினார். மேலும் அவருடன் இருந்த மற்ற நிர்வாகிகளும் மரியாதை செலுத்தினர். 

    முதல்வருடன் துரைமுருகன், டி.ஆர்.பாலு, பொன்முடி, மா.சுப்பிரமணியன், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலரும் இருந்தனர். 

    இதன் காரணமாக, முன்னதாக போக்குவரத்து மாற்றப்பட்டு, பேருந்துகள் வேறு வழியாக திருப்பிவிடப்பட்டன.

    காற்று மாசுபாடு எதிரொலி; வீட்டிலேயே இருக்க அரசு எச்சரிக்கை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....