Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்உலகம்காற்று மாசுபாடு எதிரொலி; வீட்டிலேயே இருக்க அரசு எச்சரிக்கை

    காற்று மாசுபாடு எதிரொலி; வீட்டிலேயே இருக்க அரசு எச்சரிக்கை

    அதீத காற்று மாசுபாடு காரணமாக பொதுமக்களை வீடுகளுக்குள்ளேயே இருக்க தாய்லாந்து அரசு அறிவுறுத்தி உள்ளது. 

    தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில், உலக சுகாதார அமைப்பு  அறிவுறுத்தும் காற்று மாசுபாடு அளவை காட்டிலும் 14 மடங்கு கூடுதலாக இருப்பதாக சொல்லப்படுகிறது. 

    திடீரென இந்தக் காற்றுமாசுபாடு மிகக் கடுமையாக மாறி இருப்பதால், தாய்லாந்தில் பாங்காக் மற்றும் தாய் மாகாண மக்கள் வீடுகளுக்குள்ளேயே இருக்கும்படி தாய்லாந்து அரசு அறிவுறுத்தி உள்ளது. 

    எந்த அவசியமும் இன்றி மக்கள் வெளியே வர வேண்டாம் என்றும், வெளியே சென்று அதிக நேரம் இருப்பதை மக்கள் தவிர்க்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் காற்றின் தரக்குறியீடு எண் பி.எம்2.5 என்ற அளவில் இருப்பதாகவும், இதன் காரணமாக அங்கு வசிக்கும் மக்களுக்கு மூச்சுத் திணறல் மற்றும் கண் எரிச்சல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுவதாகவும் சொல்லப்படுகிறது. 

    தற்போது இருக்கும் சூழலில் உலகிலேயே காற்று மாசடைந்த நகரங்களின் பட்டியலில் பாங்காக் 6-வது இடத்தை பிடித்து இருப்பது குறிப்பிடத்தக்கது. 

    மேகாலயா சட்டமன்றத் தேர்தல்; வேட்பாளர்களை களமிறக்கிய பாஜக 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....