Monday, March 18, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்பிரபல இயக்குநர் கே.விஸ்வநாத் காலமானார்

    பிரபல இயக்குநர் கே.விஸ்வநாத் காலமானார்

    பிரபல இயக்குநர் கே.விஸ்வநாத் ஹைதராபாதில் உள்ள தனியார் மருத்துவமனையில் நேற்று காலமானார்.

    இந்திய திரைப்பட உலகில் பிரபல இயக்குநராக திகழ்ந்தவர், கே.விஸ்வநாத். இவர் 1965 ஆம் ஆண்டு அக்னேனி நாகேஸ்வரராவ் நடிப்பில் வெளியான ‘ஆத்ம கௌரவம்’ என்ற தெலுங்கு படத்தின் மூலமாக திரைத்துறையில் இயக்குனராக அறிமுகமானார். 

    இப்படம் மாபெரும் வெற்றியடைந்த நிலையில், அடுத்தடுத்த திரைப்படங்களை இயக்கி பலரின் கவனத்தையும் ஈர்த்தார். தென்னிந்திய மொழிகளில் மட்டுமே படத்தை இயக்கினாலும், இந்திய அளவில் இவர் தன் படங்களால் பிரபலமானார். 

    குறிப்பாக, கே.விஸ்வநாத் சங்கராபரணம், சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து போன்ற திரைப்படங்கள் இன்று வரை பெரிய அளவில் பேசப்பட்டு வரும் படங்களாக இருக்கின்றன. இயக்கத்தோடு அல்லாமல், புதிய கீதை, யாரடி நீ மோகினி, சிங்கம் 2, உத்தம வில்லன், லிங்கா உள்ளிட்ட படங்களில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். 

    இந்நிலையில், கே.விஸ்வநாத் (92) வயது மூப்பு காரணமாக நேற்று ஹைதராபாதில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். இவரின் மறைவுக்கு திரைப்பிரபலங்களும், ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

    மேலும், ஐந்து முறை தேசிய விருது பெற்றுள்ள கே.விஸ்வநாத்திற்கு,  தாதா சாகேப் பால்கே விருது மற்றும் பத்மஸ்ரீ விருது கொடுத்து இந்திய அரசு கௌரவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

    பொதுவெளியில் நடனம் ஆடிய ஜோடி; 10 ஆண்டுகள் தண்டனை விதித்த அரசு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....