Wednesday, March 20, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்தளபதி 67: டைட்டில் என்ன? சமூகவலைதளங்களில் டிரெண்ட் ஆகும் விஜய்!

    தளபதி 67: டைட்டில் என்ன? சமூகவலைதளங்களில் டிரெண்ட் ஆகும் விஜய்!

    நடிகர் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 67’ படத்தின் டைட்டில் புரோமோ வீடியோவுடன் இன்று மாலை 5 மணியளவில் வெளியாகவுள்ளது. 

    நடிகர் விஜய்யின் வாரிசு திரைப்படம் கடந்த ஜனவரி 11-ஆம் தேதி வெளிவந்து திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. இப்படத்தைத் தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். இப்படத்திற்கு தற்காலிகமாக ‘தளபதி 67’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது. 

    மாபெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகி வரும் ‘தளபதி 67’ படத்தில் த்ரிஷா, மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், அர்ஜூன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான், பிரியா ஆனந்த் மற்றும் மேத்யூ தாமஸ் என பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. 

    இந்நிலையில், இன்று மாலை 5 மணியளவில் தளபதி 67 படத்தின் டைட்டில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட உள்ளது. மேலும், இப்படத்தின் டைட்டில் புரோமோ வீடியோ ஒன்றின் மூலம் அறிவிக்கப்பட உள்ளதால், விஜய் ரசிகர்கள் ஆவலுடன் அந்த புரோமோவை எதிர்நோக்கியபடி உள்ளனர்.

    மேலும், ரசிகர்கள் ‘தளபதி 67’ படத்தின் அதிகாரப்பூர்வ டைட்டில் கருடன் என்று கணித்துள்ளனர். இன்னும் பல கணிப்புகளை சமூகவலைதளங்களில் ரசிகர்கள் வெளிப்படுத்தி வருகின்றனர். இதனால், சமூகவலைதளங்கள் தளபதி 67 (#thalapathy67) என்ற ஹேஷ்டேக்கால் நிரம்பியுள்ளது.

    காற்று மாசுபாடு எதிரொலி; வீட்டிலேயே இருக்க அரசு எச்சரிக்கை

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....