Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்'தமிழ்நாட்டிற்கு இம்முறை ஒரு திருக்குறளுமில்லை' - பட்ஜெட் குறித்து விமர்சித்த ஜோதிமணி

    ‘தமிழ்நாட்டிற்கு இம்முறை ஒரு திருக்குறளுமில்லை’ – பட்ஜெட் குறித்து விமர்சித்த ஜோதிமணி

    பிரதமர் நரேந்திர மோடி அரசின் நிதிநிலை அறிக்கையில் வழக்கமாக தமிழ்நாட்டிற்கு ஒரு திருக்குறளாவது கிடைக்கும். இம்முறை அதுவுமில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கூறியுள்ளார்.

    மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் கடந்த புதன்கிழணை மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது. 

    குறிப்பாக, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகளிமிருந்து இந்த பட்ஜெட்டிற்கு கடும் எதிர்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில்,  வழக்கமாக பிரதமர் நரேந்திர மோடி அரசின் நிதிநிலை அறிக்கையில் தமிழ்நாட்டிற்கு ஒரு திருக்குறளாவது கிடைக்கும். இம்முறை அதுவுமில்லை என்று காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி கூறியுள்ளார்.

    மேலும் ,150 கல்லூரிகளை அமைப்போம் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டபொழுது, மதுரை எய்ம்ஸ் மருத்துவமனையின் ஒற்றை செங்கல் நினைவுக்கு வருவதை தவிர்க்கமுடியவில்லை என்றும் ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

    முன்னதாக, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த பட்ஜெட்டில் முக்கிய அம்சங்கள் எதுவுமில்லை என தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

    தளபதி 67: டைட்டில் என்ன? சமூகவலைதளங்களில் டிரெண்ட் ஆகும் விஜய்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....