Wednesday, March 27, 2024
மேலும்
    Homeசெய்திகள்விளையாட்டு'உலக கோப்பைக்குப் பிறகு எனது இன்ஸ்டாகிராம் பக்கம் முடங்கியது' - மனம் திறந்த மெஸ்ஸி!

    ‘உலக கோப்பைக்குப் பிறகு எனது இன்ஸ்டாகிராம் பக்கம் முடங்கியது’ – மனம் திறந்த மெஸ்ஸி!

    உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு எனது இன்ஸ்டாகிராம் பக்கம் அப்படியே சில நாட்களுக்கு முடங்கியது என கால்பந்து வீரர் மெஸ்ஸி தெரிவித்துள்ளார். 

    கத்தாரில், நடந்து வந்த கால்பந்து உலகக் கோப்பை போட்டியானது நேற்றுடன் முடிவடைந்தது. இப்போட்டியின் ஆரம்பத்தில், தலா 4 அணிகள் கொண்ட 8 பிரிவுகள் என மொத்தம் 32 அணிகளுடன் கடந்த ஆண்டு நவம்பர் 20-ஆம் தேதி தொடங்கி, டிசம்பர் 18-ஆம் தேதி முடிவடைந்தது. 

    இந்தத் தொடரின் இறுதிப்போட்டியில் அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்புக்கு துளியும் பஞ்சமில்லாத அளவு இந்த இறுதிப்போட்டியானது இருந்தது.

    இரு அணியினரும் திறம்பட விளையாட, இறுதியில் பெனால்டி சூட் அவுட் முறையில் 4-2 என்ற கணக்கில் மெஸ்ஸி தலைமையிலான அர்ஜென்டினா அணி வெற்றிப்பெற்று உலகக் கோப்பையை கைப்பற்றியது. 

    அர்ஜென்டினாவின் இந்த வெற்றியை உலகத்தின் பல இடங்களிலும் கால்பந்து ரசிகர்கள் கொண்டாடினர். மெஸ்ஸியை புகழ்ந்து தள்ளினர். மேலும், உலகக்கோப்பை வென்ற புகைப்படத்தை மெஸ்ஸி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். 

    இந்த புகைப்படமானது அதிக லைக்குகள் வாங்கிய புகைப்படமாக மாறியது. இந்நிலையில், தனியார் ஊடகத்திற்கு மெஸ்ஸி சமீபத்தில் பேட்டியளித்துள்ளார். அதில் இன்ஸ்டாகிராம் புகைப்படம் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது. 

    இந்த கேள்விக்கு, ‘ உலகக் கோப்பை வெற்றிக்கு பிறகு எனது இன்ஸ்டாகிராம் பக்கம் அப்படியே சில நாட்களுக்கு முடங்கியது. மில்லியன் கணக்கில் இன்ஸ்டாவில் எனக்கு மெசேஜ் வந்திருந்ததுதான் அதற்கு காரணம்.’ என்று பதில் தெரிவித்தார். மெஸ்ஸியின் இந்த பதில் தற்போது சமூகவலைதளங்களில் டிரெண்ட் ஆகி வருகிறது. 

    “இதுதான் நான்” என அறிந்து செழிப்பாக வளரும் எஸ்டிஆர் – பர்த்டே ஸ்பெஷல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....