Tuesday, March 19, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்"இதுதான் நான்" என அறிந்து செழிப்பாக வளரும் எஸ்டிஆர் - பர்த்டே ஸ்பெஷல்!

    “இதுதான் நான்” என அறிந்து செழிப்பாக வளரும் எஸ்டிஆர் – பர்த்டே ஸ்பெஷல்!

    தமிழக திரைத்துறையின் தவிர்க்க முடியாத நபர்தான், சிலம்பரசன் எனும் எஸ்டிஆர்! நடிகர், இயக்குனர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமையைை கொண்டவர், சிலம்பரசன் எனும் எஸ்டிஆர். simbu திரையுலகத்தை பொறுத்தவரை சிலம்பரசனின் நடிப்பை பற்றி, இயக்கத்தை பற்றி, பாடல்களை பற்றி என பல விதமான வாழ்த்துகள் தொடர்ந்து வெளிப்பட்ட வண்ணமே உள்ளன. ஆனால், பெரும்பாலும் சிலம்பரசனின் ஒரு குணத்தை திரையுலகம் மறந்துவிட்டது அல்லது அக்குணத்தை கேலிக்கூத்தாக்கிவிட்டது என்றே சொல்லலாம். ஆம்! உணர்ச்சிகளை வெளிப்படுத்துதல் சிலம்பரசனின் மிக முக்கியமான குணம் என்றே பார்க்க தோன்றுகிறது. 

    நம் உலகத்தை பொறுத்தவரையில் குறிப்பாக நம் இந்தியாவை பொறுத்தவரை ஆண்களுக்கென்று சில குணாதிசயங்களும், பெண்களுக்கென்று சில குணாதிசயங்களும் நிரந்தரமாய் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்று ஆண் அழுகக் கூடாது. குறிப்பாக பொது இடங்களில் அறவே கூடாது. சோக உணர்ச்சிகளை வெளிப்படுத்தக் கூடாது. தன்னை தாழ்த்தி பொது இடங்களில் பேசக் கூடாது என பட்டியலை நீட்டிகொன்டே செல்லலாம். இந்தப் பட்டியலை தெரிந்தோ தெரியாமலோ உடைத்தவர் தான், சிலம்பரசன்! 

    அவரின் பல மேடை பேச்சுகளில் வலி சார்ந்து அவர் உணர்ச்சிவசம் ஆவதை நாம் அனைவரும் கவனித்திருப்போம். அழுகை உயிர்களின் உணர்வு! அவர் பெரிய சமூகத்தை எல்லாம் ஒன்றும் திருத்தி விடவில்லை. இருப்பினும், சில ஆண்களுக்காவது அழுவது தவறில்லை என்ற எண்ணத்தை நிச்சயம் அவர் விதைத்திருப்பார். பொது இடங்களில் அழுவது தவறில்லை என்ற எண்ணத்தை  அவர் தனது நிஜ வாழ்வியலின் மூலம் நிரூபித்திருப்பார். பல ஆண்களுக்கு சிம்புவே அழுகிறார் நமக்கென்ன என்ற தொனியை ஏற்படுத்தியிருக்கலாம். தோன்றும் விதம் முழுவதும் சரியில்லை என்றாலும் தைரியம் சிலம்பரசனிடம் வந்திருக்கிறது. 

    தனக்கென ஒரு ரசிக பட்டாளத்தை வைத்திருக்கும் நடிகர் நான் பெரியவன், தலைமை தாங்குபவன் என்பதை காட்டிக்கொள்ள, முடிந்தவரை தன்னை சுய இயல்பில் இருந்து தொலைத்து வேறு ஒருவனாகவே காண்பிக்க முயற்சிப்பான் ஆனால் சிலம்பரசன் அதை செய்ததாய் தெரியவில்லை. இதுதான் நானென்று கூறி தெரியப்படுத்தி ஒரு ரசிக கூட்டத்தை வைத்துள்ளார். உருவாக்கியுள்ளார். 

    தன் சுயத்தை தொலைத்து மீண்டும் கண்டறிந்து இதுதான் நான் என அறிந்து செழிப்பாக வளரும் சிலம்பரசனுக்கு இன்று பிறந்தநாள். 

    முத்தத்தால் ஆரம்பித்த சிம்புவின் பாடல்…

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....