Friday, March 15, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு'தேவர் ஜெயந்தி விழா' முதல்வர் ஸ்டாலின் செல்ல இருந்த பசும்பொன் பயணம் ரத்து!

    ‘தேவர் ஜெயந்தி விழா’ முதல்வர் ஸ்டாலின் செல்ல இருந்த பசும்பொன் பயணம் ரத்து!

    உடல்நலக் குறைவு காரணமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் பசும்பொன் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் 115-வது குரு பூஜை மற்றும் ஜெயந்தி விழாவை முன்னிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், கமுதி அருகே உள்ள பசும்பொன் கிராமத்திற்கு நாளை பயணம் மேற்கொள்ள திட்டமிட்டு இருந்தார். இந்த பயணத்திற்காக சென்னையில் இருந்து இன்று மாலை விமான மூலம் மதுரை செல்ல திட்டமிடப்பட்டிருந்தது.

    இந்நிலையில், நேற்று இரவு அவருக்கு முதுகு வலி ஏற்பட்டதை அடுத்து, சென்னை போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு மு.க.ஸ்டாலின் வந்தார். அவருக்கு மருத்துவர்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். அதன் பிறகு, அவர் வீடு திரும்பினார்.

    அவருக்கு முதுகு வலி ஏற்பட்டதால் நீண்ட தூர பயணங்களை தவிர்க்கும் படி மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். உடல்நலக் குறைவு காரணமாக முதல்வரின் இன்றைய பசும்பொன் பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அதேசமயம் சென்னையில் உள்ள பசும்பொன் முத்துராமலிங்க தேவரின் சிலைக்கு நாளை (அக்டோபர் 30) முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்துவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையும் படிங்க: கேட்சை தவறவிட்ட இலங்கை வீரர்…இதுதான் சமயமென விளாசிய பிலிப்ஸ்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....