Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஇனி அச்சரப்பாக்கம், அரக்கோணம் வரை சென்னைதான்? பெருநகர வளர்ச்சி குழுமம் அதிரடி முடிவு

    இனி அச்சரப்பாக்கம், அரக்கோணம் வரை சென்னைதான்? பெருநகர வளர்ச்சி குழுமம் அதிரடி முடிவு

    சென்னை பெருநகரத்தின் எல்லை அச்சரப்பாக்கம், அரக்கோணம் வரை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. 

    சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில், சென்னையின் பெருநகர வளர்ச்சி குழுமத்தின் 3-ம் முழுமை திட்ட தொலைநோக்கு ஆவணம் தயாரிப்பு குறிப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். 

    இந்த கருத்தரங்கில் அமைச்சர் அன்பரசன் பேசியதாவது:

    சென்னை பெருநகரம் எப்படி இருக்க வேண்டும் என்பதற்காக எதிர்கால திட்டங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. பல சாலைகள் விரிவாக்கம் செய்யப்பட உள்ளன. அடுத்த 50 ஆண்டுகளுக்கான தேவையை சிந்தித்து திட்டமிடப்பட்டு வருகின்றன. போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதற்கு கூட எதிர்காலத்தை பற்றி திட்டமிடல் இல்லாததே காரணம். இந்தப் பணிகளை விரைவாக செயல்பாட்டுக்கு கொண்டு வந்து
    நடவடிக்கை எடுக்கப்படும் 
    என்று தெரிவித்தார். 

    இதையும் படிங்க : லதா ரஜினிகாந்துக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கு! உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

    இதன் மூலம் சென்னை பெருநகரத்தின் எல்லை அச்சரப்பாக்கம், அரக்கோணம் வரை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை நகரத்தின் பரப்பு மேலும் 3 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னை நகரத்தில் மட்டும் 55 லட்சம் பேரும், புறநகரோடு சேர்த்து 1.2 கோடி பேர் வசித்து வருகின்றனர். இந்தத் திட்டம் தொடர்பான கருத்துக் கேட்பு கூட்டங்கள் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு நடைபெறும் என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....