Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்அரசியல்சட்டவிரோத செயல்களுக்காக மியான்மர் நாட்டுக்கு கடத்தி செல்லப்பட்ட தமிழக பொறியாளர்கள் - மீட்க மருத்துவர் ராமதாசு...

    சட்டவிரோத செயல்களுக்காக மியான்மர் நாட்டுக்கு கடத்தி செல்லப்பட்ட தமிழக பொறியாளர்கள் – மீட்க மருத்துவர் ராமதாசு கோரிக்கை

    சென்னை: சட்டவிரோத செயல்களுக்காக மியான்மர் நாட்டுக்கு கடத்தி செல்லப்பட்ட தமிழக பொறியாளர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாசு வலியுறுத்தியுள்ளார்.

    இதுகுறித்து இன்று (செப்டம்பர் 20) அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது: 

    தமிழ்நாட்டைச் சேர்ந்த 60 பேர் உட்பட இந்தியாவைச் சேர்ந்த சுமார் 300 பொறியாளர்கள் மியான்மர் நாட்டின் மியாவாடி காட்டுப்பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்டு சட்டவிரோத சைபர் குற்றங்களை செய்ய கட்டாயப்படுத்தப்படுவதாக வெளியாகியுள்ள செய்திகள் மிகவும் அதிர்ச்சியளிக்கின்றன.

    இதையும் படிங்க: வெறும் நான்கு முதல்வர்கள் மட்டும் இல்ல, அதுக்கும் மேல – எடப்பாடிக்கு பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்

    தாய்லாந்தில் வேலை வழங்குவதாக அழைத்துச் செல்லப்பட்ட அவர்கள், அங்கிருந்து மியான்மருக்கு கடத்தப்பட்டுள்ளனர். சட்டவிரோத சைபர் குற்றங்களை செய்ய மறுப்பவர்கள் அடி-உதை, உடலில் மின்சாரம் பாய்ச்சுதல் உள்ளிட்ட கொடுமைகளுக்கு ஆளாக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    ஒரு குற்றமும் செய்யாத, படித்த படிப்புக்கு வேலை தேடியதற்காக அந்த இளைஞர்கள் கொடுமைகளுக்கு உள்ளாக்கப்படுவதை சகித்துக் கொள்ள முடியாது. அவர்களை மீட்க வெளியுறவுத் துறை  முயற்சிகளை மேற்கொண்டாலும் அவை முழுமையாக வெற்றி பெறவில்லை என்று கூறப்படுகிறது.

    மியான்மருக்கு அதிகாரிகள் குழுவை அனுப்பி தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் உள்ளிட்ட 300 பொறியாளர்களையும் மத்திய அரசு மீட்க வேண்டும். தாய்லாந்தில் வேலை வழங்குவதாகக் கூறி அவர்களை ஏமாற்றிய மோசடி நிறுவனங்கள் மீதும் கைது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு, மருத்துவர் ராமதாசு தெரிவித்துள்ளார்.

    இதையும் படிங்க: துணை பொதுச் செயலாளர் பதவியிலிருந்து நீங்கிய சுப்புலட்சுமி ஜெகதீசன்.. திமுகவில் பரபரப்பு!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....