Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்சென்னை விரைவில் கடலில் மூழ்கும் அபாயம் ! சென்னை மாநகராட்சி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

    சென்னை விரைவில் கடலில் மூழ்கும் அபாயம் ! சென்னை மாநகராட்சி வெளியிட்ட அதிர்ச்சி தகவல்

    காலநிலை மாற்றத்தாலும், பூமி வெப்பமயம் அடைவதாலும் ஏற்படுகின்ற விளைவுகள் தற்போது சென்னை மக்களை அச்சம் அடைய வைத்துள்ளது.

    சென்னை மாநகராட்சி சமீபத்தில் ஒரு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன் அடிப்படையில் பூமி வெப்பமயமாதல், காலநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் கடலின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இந்த கடல் நீர்மட்டமானது அடுத்த ஐந்து ஆண்டுகளில் பத்து சென்டிமீட்டர் வரை உயர வாய்ப்புள்ளது.

    அவ்வாறு உயந்தால் சென்னை மாநகரின் 29 சதவீத நிலப்பரப்பு வெள்ளத்தால் முழ்கடிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே அதனை தடுக்கவேண்டிய கடமை அணைத்து தரப்பு மக்களுக்கும் உண்டு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதன் அடிப்படையில் சென்னை மாநகராட்சி ஒரு செயல் திட்டத்தினை வகுத்துள்ளது. பசுமை வகை வாயு வெளியேற்றம் காரணமாக பூமி வெப்பமயமாதல் மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் கடலின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. எனவே இந்த பசுமை வகை வாயு வெளியேற்றம் தடுக்கப்படவேண்டும்.

    இதையும் படிங்க: பரோட்டா சாப்பிட கூடாது என்று ஏன் சொல்கிறார்கள் தெரியுமா? விவரம் உள்ளே!

    அந்த வகை வாயுவை வெளியேற்றும் பொருட்களை மக்கள் பயன்பாட்டில் இருந்து குறைத்துக்கொள்ள வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் அரசின் சார்பில் அணைத்து வித முன்னெடுப்புகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.

    இந்த நடவடிக்கைகளை வரவேற்றுள்ள பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் திரு ராமதாசு அவர்கள் அரசின் சார்பில் எடுக்கப்படும் அணைத்து நடவடிக்கைகளுக்கும் ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளார். மேலும் பூவுலகின் நண்பர்கள் அமைப்பு அரசின் நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்துள்ளது.

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....