Saturday, March 16, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுஇனி மெரீனாவுக்கு போனா கவலை வேண்டாம்-சென்னை மாநகராட்சி புதிய திட்டம்!

    இனி மெரீனாவுக்கு போனா கவலை வேண்டாம்-சென்னை மாநகராட்சி புதிய திட்டம்!

    மெரினா கடற்கரையில் 24 மணி நேரமும் இலவச இணைய வசதி வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. 

    ரயில் நிலையங்களில் வைபை (WIFI) வசதி இருப்பதை நாம் அறிவோம். பொதுமக்களின் அவசர தேவைக்காக இந்தச் சேவை உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பொதுமக்கள் தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். 

    அதேபோல, சென்னை மெரினா கடற்கரை மற்றும் பெசன்ட் நகர் ஆகிய கடற்கரையில் 24 மணி நேர இலவச இணைய சேவை வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.

    மெரினா, பெசன்ட் நகர் இரண்டு கடற்கரைகளும் சென்னை வாசிகளின் பிரதான பொழுது போக்கு தளமாக விளங்கி வருகிறது. அதேபோல் வெளிநாட்டவர் வந்து செல்லும் தமிழகத்தின் மிக முக்கிய சுற்றுலா தளமாகவும் இருக்கிறது. 

    இந்நிலையில், இந்த கடற்கரைகளில் சுற்றுலா துறையுடன் இணைந்து பொதுமக்களுக்கு இலவச இணையதள சேவை வழங்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. முதல்கட்டமாக மெரினாவில் 5 இடங்களில் இலவச வைபை (WIFI) வசதி நிறுவப்படவுள்ளது.

    இதையும் படிங்க: ஓடும் ரயிலில் வௌவாலாக மாறி தொங்கிய மாணவர்கள்.. தொடரும் சாகச அட்டூழியங்கள்

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....