Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடுசென்னை சென்ட்ரல் மெட்ரோவில் தாய்மார்களுக்காக புதிய முயற்சி..

    சென்னை சென்ட்ரல் மெட்ரோவில் தாய்மார்களுக்காக புதிய முயற்சி..

    சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. 

    சென்னையில் மெட்ரோ ரயில் சேவை முக்கிய போக்குவரத்து சேவையாக மாறியுள்ளது. இந்த ரயில் நிலையங்களில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 2,45,000 பயணிகள் பயணம் செய்கின்றனர். பயணிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.அதிகளவில் பெண்களும், தாய்மார்களும் சென்னை மெட்ரோ ரயிலில் பயணம் செய்து வருகின்றனர். 

    இந்நிலையில், அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள் பல முன்னெடுப்புகளை எடுத்து வருகிறது. அந்த வகையில் சமீபத்தில் ரயில் நிலையங்களில் புதியதாக 41 நகரும் படிக்கட்டுகள் நிறுவப்பட ஆயத்தப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அவற்றில் ஒரு பகுதியாக, எம்.ஜி.ஆர். சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக கூடுதலாக 2 நகரும் படிகட்டுகள் பொதுதளத்திலிருந்து நடைமேடை 1 மற்றும் 2-க்கு சென்று வர இன்று திறக்கப்பட்டு பயணிகளின் பயன்பாட்டிற்கு வந்துள்ளது.

    மேலும், மிக முக்கியமாக சென்னை மெட்ரோ ரயிலில் பயணிக்கும் தாய்மார்களின் வேண்டுகோளுக்கு இணங்க சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் பச்சிளம் குழந்தைகளுக்கு பாலூட்டும் அறை பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டுள்ளது. 

    சென்னை அணியை வீழ்த்திய குஜராத்..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....