Sunday, March 17, 2024
மேலும்
    Homeபொழுதுபோக்குசினிமா செய்திகள்'விஜய் அங்கிள் நீங்க வரவே மாட்டீங்களா' என கேட்ட சிறுமியிடம் விஜய் வீடியோ காலில் பேச்சு...

    ‘விஜய் அங்கிள் நீங்க வரவே மாட்டீங்களா’ என கேட்ட சிறுமியிடம் விஜய் வீடியோ காலில் பேச்சு – வைரல் வீடியோ!

    நடிகர் விஜய் தன்னை பார்க்க வேண்டுமென்று கூறிய சிறுமியிடம் வீடியோ காலில் பேசியது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. 

    இந்திய திரையுலகில் முக்கியமான நடிகர்களுள் முதன்மையானவர், நடிகர் விஜய். இவருக்கென பெரிய ரசிக பட்டாளமே உள்ளது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இவருக்கென ரசிகர்கள் உள்ளனர். 

    கடந்த ஜனவரி 11-ஆம் தேதி விஜய் நடிப்பில் வெளிவந்த வாரிசு படமும் நல்ல வரவேற்பை பெற, சமீபத்தில் வெளிவந்த லியோ படத்தின் புரோமோ வீடியோவும் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்தது. 

    இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு நடிகர் விஜயை பார்க்க வேண்டும் என்று சிறுமி ஒருவர் பேசும் வீடியோ காட்சி இணைய வெளிக்கு வந்தது. இந்த வீடியோவை விஜய் ரசிகர்கள் பலரும் ஷேர் செய்து வைரலாக்கினர். 

    இதையடுத்து, சிறுமி பேசும் வீடியோ தொடர்பான தகவல் விஜய்க்கு சென்றடைந்த நிலையில், தன்னை பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்ட சிறுமியிடம் விஜய் வீடியோ காலில் பேசியுள்ளார்.

    இது தொடர்பான வீடியோ பதிவை விஜய் ரசிகர்கள் மன்ற தலைவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். தற்போது, இந்த வீடியோ பதிவு இணையத்தில் டிரெண்ட் அடித்து வருகிறது. 

    சென்னை சென்ட்ரல் மெட்ரோவில் தாய்மார்களுக்காக புதிய முயற்சி..

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....